TRAI புதிய விதிகள்… மற்றொருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கினால் கடும் நடவடிக்கை

டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், சைபர் குற்ற சம்பவங்களின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடுபட்டு சேர்த்த பணத்தை ஆன்லைன் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் பார்கிறோம். இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் TRAI முக்கிய நடவடிக்கையை மேற்கண்டுள்ளது.

புதிய சிம் கார்டு விதிகளின் கீழ் டெலிகாம் துறை (DoT) கடுமையான விதிகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.  போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் செய்தி மூலம், சைபர் குற்றங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சமீபத்தில் TRAI கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் ஆயிரக்கணக்கான எண்கள் முடக்கப்பட்டுள்ளன. 

சைபர் மோசடிகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு பல ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், புதிய சிம் கார்டுகளை வாங்க தடை விதிக்கப்படலாம். இவர்களை மூன்று ஆண்டுகளுக்கு கறுப்புப் பட்டியலில் சேர்க்கலாம். அதைப் பற்றி விரிவாகச் சொல்வோம்.

வேறொருவரின் பெயரில் சிம் கார்டை வாங்கி, அதை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்து பலர் கேள்விப்பட்டிருப்போம். இது போன்ற நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க TRAI அதிகாரிகள் தயாராக உள்ளனர். சிம் கார்டுகளை வேறொருவரின் பெயரில் வாங்குபவர்கள் அல்லது மோசடி செய்திகளை அனுப்புபவர்கள் சிக்கலில் சிக்கக்கூடும். இத்தகைய குற்றவாளிகள் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுவார்கள்.

வேறு ஒருவரின் பெயரில் சிம்கார்டு வாங்கி மோசடி செய்பவர்களை டிராய் பிளாக் லிஸ்ட் செய்ய முடியும். இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம். தடுப்புப்பட்டியலில் உள்ளவர்களின் சிம் கார்டுகள் முடக்கப்பட்டு, ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை புதிய இணைப்பு எடுக்க தடை விதிக்கப்படும். புதிய விதிகளின்படி, மற்றொருவரின் பெயரில் சிம்கார்டு எடுப்பது குற்றமாக கருதப்படுகிறது.

முன்னதாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர் ஸ்பேம் அழைப்புகள் பெற்றது குறித்து புகார் அளித்தால், தொலைத்தொடர்பு நிறுவனம் சிக்கலைத் தீர்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் TRAI கூறியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.