கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை – திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பம்சங்கள்!

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடல் நடுவே விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி … Read more

ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது தவறு: உத்தரபிரதேச உலாமா ஃபத்வா

ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது தவறு என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் உலாமாவாகவும் இருக்கும் இவர், ஷரீயத் சட்டத்தை ஆராய்ந்து ஃபத்வாக்களையும் வெளியிட்டு வருகிறார். 2025 ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தயாராகி வரும் வேளையில், இவரிடம் முஸ்லிம்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடலாமா என விளக்கம் கேட்டுள்ளனர். இதற்கு ஷரீயத் முறைப்படி அவர் சட்டவிளக்கம் அளித்துள்ளார். ரிஜ்வீ தனது … Read more

உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா: மணிக்கு 450 கி.மீ. பயணித்து சாதனை

மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலானது நவீன தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை … Read more

நமக்குள்ளே…

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி ஒருவரை, நடைபாதை பிரியாணிக் கடை வியாபாரியான 37 வயது ஞானசேகரன் வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்திருப்பது… பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகக் காவல்துறையோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அத்தனை விவரங்களும் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பொதுவெளியில் கசியவிட்டு, ‘இனிமேல் யாராவது புகார் கொடுக்க முன்வருவீர்களா?’ என்று பெண்களை மிரண்டுபோகச் செய்துள்ளது. திருட்டு, வழிப்பறி என ஏற்கெனவே 20 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிதான் … Read more

மாணவி வன்கொடுமை விவகாரம்: பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிய புஸ்ஸி ஆனந்த் கைதும், விஜய்யின் எதிர்வினையும்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறி அதனை துண்டுபிரசுரமாக வழங்கிய தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 250 பேரை சென்னையில் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். … Read more

உலகின் மிக உயரமான 7 சிகரங்களில் ஏறி மும்பை சிறுமி சாதனை

உலகின் மிக உயரமான 7 சிகரங்களில் ஏறி மும்பையைச் சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் காம்யா கார்த்திகேயன் (17), மும்பை கடற்படை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே மலை ஏறுவதில் ஆர்வம் காட்டினார். இவர் முதல் முறையாக தனது 7-வது வயதில் உத்தராகண்டில் உள்ள ஒரு மலையில் ஏறினார். இவர் தனது 16-வது வயதில் உலகிலேயே உயரமான, ஆசியா … Read more

2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

2024-ம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. பேரழிவுகள் காரணமாக ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார தாக்கம், மனித உயிரிழப்புகள் குறித்த தகவல்களை கிறிஸ்டியன் … Read more

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை முதல் புயல் பாதிப்பு வரை – ஆளுநரிடம் விஜய் பேசியது என்ன?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம், தவெக தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார். பருவமழை ஃபெஞ்சல் புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மாநில அரசு கோரும் நிவாரணத் தொகையை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இச்சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் … Read more

முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்: தலைவர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி: முன்னதாக, இன்று காலை மன்மோகன் சிங்கின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. … Read more

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் பதிவாளர் அறை கதவு பூட்டை உடைத்து புதிய பதிவாளர் பொறுப்பேற்பு – நடந்தது என்ன?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையின் பூட்டை உடைத்து, துணை வேந்தரால் நியமிக்கப்பட்ட புதிய பதிவாளர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு நீக்கம் செய்யப்பட்ட பதிவாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் க.சங்கருக்கும், பொறுப்பு பதிவாளர் சி.தியாகராஜனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவுகிறது. இதனிடையே, டிச.27-ம் தேதி ஒருவரையொருவர் பணி நீக்கம் செய்து உத்தரவு … Read more