தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்க: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் குறித்த செய்திகள் வருத்தமளிக்கின்றன. இந்த துயரத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களுடைய உடைமைகளையும் வீடுகளையும் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முன்வந்து நிவாரணப் பணிகளில் … Read more

வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் ஜன.2-க்கு வழக்கு ஒத்திவைப்பு

டாக்கா: வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக … Read more

சிவகார்த்திகேயனை கடுப்பேத்திய சுதா கொங்கரா? கசிந்த கிசுகிசு – தயாரிப்பாளர் போட்ட ட்வீட்டை பாருங்க

Cinema Gossip Latest News: புறநானூறு திரைப்படத்தின் லுக் டெஸ்டின் போது சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கிசுகிசு குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

திருப்பதி : இன்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி… தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகாக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உள்ளூர் மக்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டது. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாக குழு சாமி தரிசனம் செய்ய உள்ளூர் மக்களுக்கு மீண்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி, சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை … Read more

கோலி, ரோகித் இல்லை.. முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீச அவர்கள்தான் காரணம் – சிராஜ்

பெர்த், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, … Read more

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே… இஸ்ரேல் மீது முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

பெய்ரூட், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா … Read more

இனவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த இடமளியோம் – அமைச்சரவை பேச்சாளர்

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் … Read more

`அயோத்தி டு சம்பல்… எப்போதுதான் நிறுத்துவார்கள்?' – Sambhal MP ஜியாவுர் ரஹ்மான் | Exclusive

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவின்படி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யச் சென்ற போது அதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட, காவல்துறையினருக்கும் போட்டக்காரர்களுக்கும் இடையே  மோதல் ஏற்பட… அது வன்முறையாக வெடித்தது. பின்னர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் சம்பல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த … Read more

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (டிச.2) இரவு கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மோகன்குமார், சுதின், மாணிக்கவேல், ஆகாஷ், ராமன், செல்வநாதன், தமிழ்க்கலை, சக்திவேல், வினித்குமார், பொன்னையன், கமலேஷ், சிவக்குமார், பூவரசன், ஆறுமுகம், ரத்தினவேல், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன், சிலம்பரசன் … Read more