சீக்கிய அமைப்பு விதித்த தண்டனையை ஏற்று கழிப்பறையை சுத்தம் செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர்

புதுடெல்லி: ஷிரோமணி அகாலி தள் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதத்துக்கு எதிராக செய்த செயல்களுக்காக மத குருமார்களால் விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்று பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோர் பாத்திரங்களை கழுவி, கழிப்பறையை சுத்தம் செய்தனர். பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2012 வரை சிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகனான சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். 2007ல் சீக்கிய … Read more

Tech Tips: இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க…. ஸ்மார்போன் கேமிரா காலியாகிவிடும்

ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, காலை விழித்தது முதல் இரவு படுக்கும் வரை தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால், இன்றைய டிஜிட்டல் உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன. தொலைத் தொடர்பு வசதிக்கு மட்டுமின்றி, மொபைல் போன்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான சிறந்த ஆதாரமாக ஆகி விட்டன. இப்போதெல்லாம் போன் வாங்கும் முன் முதலில் செக் செய்வது அதன் கேமராவைத் தான். எந்த … Read more

அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா சேரலாம்… டொனால்ட் டிரம்ப் கிண்டல்…

அமெரிக்காவை சுரண்டி வாழும் கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக சேரலாம் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக வரியை உயர்த்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு கனடா மீது அமெரிக்கா 25% வரி விதித்தால் எங்களின் பொருளாதாரம் அழிந்துவிடும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். ஜஸ்டின் ட்ரூடோ-வின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய டொனால்ட் டிரம்ப் “ஆண்டுதோறும் … Read more

டெல்லியில் சிறிது முன்னேற்றம் அடைந்த காற்றின் தரம்

புதுடெல்லி, டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில மாதங்களுக்கு மேலாக ஆபத்தான நிலையில் இருந்து வந்த நிலையில், இன்று சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 274 ஆக பாதிவானது. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் சுவாச பிரச்சினை குறைந்துள்ளது. நகரின் 37 கண்காணிப்பு நிலையங்களில், பவானா, ஜஹாங்கிர்புரி, முண்ட்கா, ரோகினி, ஆர் கே புரம், ஷாதிபூர், சிரி கோட்டை உள்பட எட்டு … Read more

ஆஸ்திரேலிய அணியில் விரிசல் என்ற உண்மையை கூறியதால் ஹேசில்வுட் நீக்கமா..? – கவாஸ்கர் விமர்சனம்

மும்பை, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இதனிடையே பெர்த் டெஸ்ட் தோல்விக்கு பிறகு நிருபர்களிடம் … Read more

இலங்கையில் கனமழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

கொழும்பு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக இலங்கையிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிழக்கு கடலோர மாகாண பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் 15 பேர் பலியாகி இருந்தனர். பலர் மாயமாகினர். இந்தநிலையில் இலங்கையில் கனமழைக்கு பலியாகி மாயமான 5 பேரின் … Read more

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க நியமனம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2014.01.01ஆம் திகதியன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து, 2020.01.01ஆம் திகதி பொலிஸ் அத்தியட்சகராகவும், 2024.01.01ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார். மேலும் அவர், திருக்கோணமலை, வவுனியா ஆகிய பிரிவுகளிலும், பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுப் பிரிவின் பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொது மக்கள் நட்புறவுப் பிரிவின் பதில் பணிப்பாளராகவும், சட்டப் … Read more

விழுப்புரம்: `காரை விட்டு இறங்க மாட்டீங்களா?’ – பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்… நடந்தது என்ன?

தெற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. அப்போது வீசிய சூறைக்காற்றாலும், தொடர் கனமழையாலும் விழுப்புரம் மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து, பல இடங்களில் தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. அதேபோல ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன. அதையடுத்து வெள்ளத்தில் சேதமான மரக்காணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் … Read more

“சாத்தனூர் அணை விவகாரத்தில் அதிமேதாவிகளுக்கு அறிக்கை விட்டிருக்கிறேன்” – துரைமுருகன்

வேலூர்: சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்ட குற்றச்சாட்டில் ”அதிமேதாவிகளுக்கு அறிக்கை விட்டிருக்கிறேன்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் விஐடி அண்ணா கலையரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா இன்று (டிச.3) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில், 129 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், … Read more

தமிழகத்துக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்பிக்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தின. நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக உரையாற்றிய திமுக எம்பி டி.ஆர் பாலு, “ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் புயல் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய துயரை சந்தித்துள்ளனர். சுமார் … Read more