ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: சேதங்களை பார்வையிட தமிழ்நாடு வருகிறது மத்திய குழு…

சென்னை:  ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் விசாரித்த நிலையில், புயல் சேதம் குறித்து  ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, பாதிப்புகளை  ஆய்வு செய்ய தமிழகத்துக்கு குழுக்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 3 குழுக்கள் தமிழ்நாடு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சா புயல், கடந்த வாரம் முழுவதும் … Read more

வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி, பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதற்கிடையே, பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், புயலால் ஏற்பட்ட … Read more

சிலாபம் புகையிரதப் பாதையினூடாக பயணிக்கும் புகையிரத சேவை சீரமைக்கப்பட்டுள்ளது

சிலாபம் புகையிரதப் பாதையினூடாக பயணிக்கும் புகையிரத சேவை சீரமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே துணைப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) ஜே.என். இந்திபொலகே தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளம் இன்று (03) அது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் புகையிரதப் பாதையில் இன்று காலை புகையிரதப் போக்குவரத்து தடைபட்டடிருந்ததைத் தொடர்ந்தே இந்த ரயில் சேவை சீரமைக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரை அறிவோம்: இந்திய சினிமாவில் அம்பேத்கர் – புறக்கணிப்பும் எழுச்சியும்!

கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அம்பேத்கரிய / தலித்திய சினிமாவின் எழுச்சி அலை பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. வடக்கில் நாகராஜ் மஞ்சுளே, நீரஜ் கய்வான், தமிழில் பா.ரஞ்சித் போன்றோரின் வருகைக்குப் பிறகு அம்பேத்கரை, அவரது கொள்கைகளை திரையில் முன்னிலைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் தெரிகிறது. சமீபத்திய உதாரணங்களாக இதில் மாரி செல்வராஜ் படங்கள், ஞானவேலின் ‘ஜெய்பீம்’ போன்ற படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இது கடந்த 10 அல்லது 15 ஆண்டு நிலவரம் மட்டுமே. … Read more

சாத்தனூர் அணை திறப்பால் 4 மாவட்டங்கள் பாதிப்பு: ரூ.25,000 நிவாரணம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இன்றி தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: கடற்படை தளபதி தினேஷ் குமார் தகவல்

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்று கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய கடற்படைக்காக 62 போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கியை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் புதிதாக ஒரு போர்க்கப்பல் கடற்படையில் … Read more

OnePlus 13: இந்தியாவில் எப்போது அறிமுகம்? நிறுவனம் அளித்த அட்டகாசமான தகவல்

OnePlus 13 Launch in India: OnePlus பிரியர்களுக்கு சூப்பர் செய்தி!! OnePlus இன் புதிய தொலைபேசியான OnePlus 13 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் OnePlus 13R ஃபோனைப் பற்றி எந்த தகவலும் நிறுவனம் மூலம் வழங்கப்படவில்லை. அதேசமயம் இந்த இரண்டு போன்களும் ஒன்றாக அறிமுகப்படுத்தப்படும் என்று முன்பு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.  OnePlus 13 ஜனவரி 2025 இல் இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் … Read more

வடமாவட்டங்களின் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைப்பு!

சென்னை: வடமாவட்ங்களில் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.  முன்னறிவிப்பு இன்றி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், பல கிராமங்கள் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுக்கு திமுக அரசும்,  அதிகாரி களும்தான்  காரணம் என  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், சாத்தூர் அணை நிரம்பிய நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணை திறந்து விடப்பட்டது. … Read more

Tamils in Pakistan: பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் பற்றி தெரியுமா? – வியக்கவைக்கும் வரலாறு!

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும் சிறு அளவில் தமிழ் மக்கள் வாழ்வது நம்மில் பலருக்கும் அதிசயமாக இருக்கும். ஆதிதமிழன் பாகிஸ்தானிலும் வசிக்கிறான். பாகிஸ்தானில் இருக்கும் பலுச்சிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழியானது திராவிட மொழி என்கிறது ஓர் ஆய்வு. நாம் இந்தக் கட்டுரையில் அவர்கள் குறித்துப் பேசவில்லை. நாம் பேசுவது இங்கிருந்து புகம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மதராஸ் தமிழர்கள் குறித்து. இந்தியப் பிரிவினை … Read more

வேலூர் – சேலம் காவல் பயிற்சி பள்ளிகளில் டிஜிபி ஆய்வு: 2,665 போலீஸாருக்கு நாளை முதல் அடிப்படை பயிற்சி

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,665 போலீஸாருக்கு நாளை முதல் அடிப்படை பயிற்சி தொடங்க உள்ளது. இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ள வேலூர், சேலம் காவல் பயிற்சி பள்ளிகளில், காவல்துறை பயிற்சி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர்கள் 2,665 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி வழங்கினார். புதிதாக தேர்வு … Read more