சம்பல் பகுதியை பார்வையிட சென்ற காங்கிரஸார் – போலீஸார் தள்ளுமுள்ளு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பலில் ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்யச் சென்ற தொல்லியல் துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், வன்முறை பாதித்த சம்பல் … Read more

“காசாவில் இருக்கும் பிணைக் கைதிகளை உடனே விடுவிக்காவிட்டால்…” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த … Read more

ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அதுகுறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.  மாமல்லபுரம் அருகே கரையை கடந்த பெஞ்சல் புயல் நிமிடத்துக்கு நிமிடம் தனது போக்கினை மாற்றி மாற்றி மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தது. இந்த புயல்  காரணமாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்படும் என நினைத்து தமிழ்நாடு அரசு, சென்னை பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தியது. ஆனால், புயலானதாக கடைசி நேரத்தில், சென்னை … Read more

Rain Alert : `இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?'

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் இன்னும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதனால், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, உயிர் சேதம், கட்டட சேதம் ஆகியவையும் நடந்து வருகிறது. இந்தத் தொடர் மழையால், இன்று சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சேலம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் … Read more

விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் பாலத்தில் ரயில் இயக்கம் தடைபட்டது: விரைவு ரயில்களின் சேவை கடுமையாக பாதிப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தில் ரயில் இயக்கம் தடைப்பட்டது. இதனால், 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இப்புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழை காரணமாக, விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேவும், திருக்கோவிலூர் – தண்டரை இடையேவும் ரயில்வே பாலத்தில் மழை நீர் அளவு அபாய கட்டத்தை எட்டியது. இதன் காரணமாக, இதன் வழியாக ரயில்கள் … Read more

இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து வங்கதேசத்தவருக்கு சிகிச்சை தர மேற்கு வங்க மருத்துவர்கள் மறுப்பு

கொல்கத்தா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்கான் கோயிலின் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் டாக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வங்க தேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனை களில் உள்ள பல மருத்துவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், சிலிகுரியைச் … Read more

Filmfare OTT 2024 : `ரஹ்மானுக்கு இரண்டு விருது' – ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ஓ.டி.டி படைப்புகள்!

2024-ம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருது விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஃபிலிம் ஃபேர் OTT தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கு விருதளிக்க ஆரம்பித்தது. இந்தாண்டு படங்களுக்கான பிரிவில் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வெளியான `அமர் சிங் சம்கில்லா’ (AMAR SINGH CHAMKILA) மற்றும் தொடர்களுக்கான பிரிவில் `ரயில்வே மென்’ (RAILWAY … Read more

அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை: விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை

ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக ஆகியன வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்வாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில … Read more

அரசியல் சட்டம் தொடர்பான விவாதம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்

புதுடெல்லி: அதானி மீதான லஞ்ச வழக்கு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கவுரல் கோகோய் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி கட்சி), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), அபே குஷ்வாகா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), ஸ்ரீகிருஷ்ண தேவராயலு … Read more

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார்

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது தலைவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ரஷ்யாவின் கஸான் நகரில், ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 16-வது மாநாடு நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். … Read more