இவிஎம் இயந்திரம் குறித்து வீடியோ வெளியிட்டு மாயமான சையது சுஜா மீது மும்பை போலீஸார் வழக்கு

மும்பை: மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என வீடியோ வெளியிட்ட சையது சுஜா மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், சையது சுஜா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிர தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களில் (இவிஎம்) தன்னால் முறைகேடு செய்ய முடியும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி (சிஇஓ) … Read more

ரூ.135 கோடி மின் நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும்: வங்கதேசத்துக்கு திரிபுரா அரசு எச்சரிக்கை

அகர்தலா: மின்சாரம் வாங்கியதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கதேசத்திடம் திரிபுரா மாநிலம் அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதுடன், கோயில்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்கான் கோயிலின் குரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கைதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், டாக்கா … Read more

விழுப்புரம் – சென்னை இடையே ரயில் சேவை தற்காலிக ரத்து

சென்னை விழுப்புரம் – சென்னை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.   பெஞ்சல் புயல் காரணமாகபெய்த கனமழையால், விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏரிகளில் இருந்து திறந்துவிடப் பட்ட வெள்ள நீர்காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன்,   சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பகுதிகளில், ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரினால் மூழ்கி உள்ள நிலையில், பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை … Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) 2024(2025) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் 2024.11.05 ஆம் திகதி முதல் 2024.11.30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் கோரப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக விண்ணப்ப முடிவுத்திகதி 2024 டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்படின், பின்வரும் தொடர்பு இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளமுடியும் என்றும் … Read more

“நெஞ்சைப் பதற வைக்கிறது” – தி.மலை மண் சரிவு குறித்து விஜய் அறிக்கை

சென்னை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் … Read more

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார். படத்தை பார்வையிட வருகை தந்த பிரதமர் மோடியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் இணைந்து பிரதமர் மோடி இப்படத்தைப் பார்த்தார். கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா … Read more

திருவண்ணாமலையில் சோகம்: மண்சரிவில் சிக்கிய 7 பேரும் சடலங்களாக மீட்பு

திருவண்ணாமலை:  ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் கூண்டோடு பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக   திருவண்ணாமலை  மாவட்டமே சோகத்தில் மூழ்கி உள்ளது. திருவண்ணாமலையில் மகாதீபம் திருவிழா தொடங்கி உள்ள நிலையில், அண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல், திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சூறையாடிச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை … Read more

ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் 

தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலைகளில் மக்களுக்கு தொடர்ச்சியாக அரிசி விநியோகிப்பதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசி வழங்க வேண்டியதன் அவசியத்தை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்காக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார். … Read more

Brain Rot: Oxford University இன் 'Word of the Year'; இந்த Gen Z வார்த்தையின் அர்த்தம் என்ன?

நீங்கள் நீண்ட நேரம் மொபைலில் வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குத் தொடர்புடைய வார்த்தையைத்தான் 2024ஆம் ஆண்டுக்கான Word of the Year ஆகத் தேர்ந்தெடுத்துள்ளது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம். சமூக வலைத்தளங்களில் புழங்கும் சொற்கள் தொடர்ந்து Word of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு Rizz, அதற்கு முந்தைய ஆண்டு Goblin Mode போன்ற சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு Brain rot என்ற சொல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Brain … Read more