திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 1-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டியது. திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர அண்ணாமலையில் … Read more

அரசியல் என்பது ‘திருப்தியற்ற ஆன்மாக்களின் கடல்’ – மத்திய அமைச்சர் கட்கரி

நாக்பூர்: அரசியல் என்பது திருப்தியற்ற ஆன்மாக்களின் கடல்; அங்கு ஒவ்வொரு நபரும் தற்போதைய பதவியை விட உயர்ந்த பதவிக்காக ஆசைப்படுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ’50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “அரசியல் என்பது திருப்தி அற்ற ஆன்மாக்களின் கடல். இங்கே ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள். கவுன்சிலராக இருக்கக் கூடியவருக்கு எம்எல்ஏ-வாக … Read more

மிரட்டும் மழை பாதிப்புகள்… மீளாத மாவட்டங்கள்… நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

School Colleges Leave Updates: கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில்கொண்டு, பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… ரூ. 2,000 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ளது. வரலாறு காணாத இந்த புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட  குழுவின் அறிக்கை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Rain Alert: 'டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும்' – வானிலை ஆய்வு மையம் தகவல்

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து இந்த டிசம்பர் மாதத்திற்கான பருவமழை ஆரம்பிக்கவிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் வடதமிழகக் கடலோரப் பகுதிகளான புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக் கொட்டித் தீர்த்துள்ளது. திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து இந்த டிசம்பர் மாதம் பருவமழை ஆரம்பிக்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதம் இயல்பை விடக் கூடுதலாக மழைப் … Read more

விஜய் குறித்து அண்ணாமலை பேசியது வெளிச்சம் தேடும் முயற்சி: தவெக விமர்சனம்

சென்னை: விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சார விளம்பர பேச்சுகள் முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாகும். மதச்சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையை முன்வைத்து தவெக பயணிக்கிறது. திராவிடம், தமிழ் தேசியம் என எந்த அடையாளத்துக்கு உள்ளாகவும் சுருங்க விரும்பவில்லை என கொள்கை … Read more

“முஸ்லிம்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்துங்கள்” – ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும். நாட்டில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சம்பல் பகுதியில் நடைபெற்றதைப் போன்ற வன்முறைகளை மத்திய அரசு நிறுத்த … Read more

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் ஏஐ குறித்த ‘உமாஜின்’ மாநாடு: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில் ‘உமாஜின் 2023’ என்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடு கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடத்தபப்ட்டது. அதைத்தொடர்ந்து ‘உமாஜின் 2024’ நடப்பாண்டில் நடைபெற்று, பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மூன்றாம் முறையாக ‘உமாஜின் 2025’ சர்வதேச தொழில்நுட்ப மாநாடு வரும் … Read more

எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை! சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

X தளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.