நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி

புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர் ) ரூ.1.82 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுவுடன் ஒப்பிடுகையில் இது 8.5 சதவீதம் அதிகம் என்றும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் அதிக வருவாய் ஈட்டியதன் மூலம் இது சாத்தியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.34,141 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.43,047 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.91,828 கோடியாகவும், செஸ் … Read more

குல்தீப், பிஷ்னோய் இல்லை.. அஸ்வினுக்கு சரியான மாற்று வீரர் அவர்தான் – ஹர்பஜன் சிங் கணிப்பு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 105 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளார். மேலும், 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் இதுவரை 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இருப்பினும் தற்போது 38 வயதை எட்டியுள்ள அவர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார் என்று … Read more

பாகிஸ்தானில் இரு பிரிவினர் மோதல்: பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 21-ந் தேதி கைபர் பக்துங்வாவின் குர்ராம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். … Read more

பாராளுமன்றம் நாளை (03) கூடவுள்ளது 

பாராளுமன்றம் நாளை (03) முதல் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதன்படி, நாளை (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறும்.

H.Raja: "Dravidian Stock-களுக்கு எதிரான Fight எப்பவுமே தொடரும்" – ஹெச்.ராஜா

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளின் விசாரணையில் ஒவ்வொரு வழக்குக்கும் தலா ஆறு மாதங்கள் (ஓராண்டு) சிறைத் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஹெச். ராஜா, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘பெரியார் சிலையை உடைப்பேன்’ என தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதே ஆண்டு தி.மு.க எம்.பி கனிமொழிக்கு எதிராக அவதூறாக கருத்து கூறியதாக … Read more

கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் 3 ரயில்கள் ரத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் மூன்று ரயில்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திற்கும் இடையே பாலம் எண் 452-ல் கனமழையின் காரணத்தால் அதிக அளவு மழை தண்ணீர் தண்டவாளம் உள்ள பாலத்தின் கீழே செல்வதால் இன்று (டிச.2) கடலூர் சிதம்பரம் வழியாக செல்லும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் அதிவேக ரயில், சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் அதிவேக … Read more

மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (டிச. 2, 2024) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பலரிடம் போக்குவரத்துத் துறையில் வேலை கிடைக்கச் செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது. … Read more

Cyclone Fengal | வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர்

Cyclone Fengal Effect Free Relief Flood: விக்கிரவாண்டிவட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மூக்க ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

ஐபிஎல் 2025ல் கேகேஆர் அணியின் கேப்டனாகும் ரஹானே? பிராவோவின் மாஸ்டர் பிளான்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளனர். ஐபிஎல் 2024 சீசனில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைத்து கொள்ளாமல் விடுவித்தது. ஏலத்தில் அவரை மீண்டும் எடுத்து கொள்ளலாம் என்று அவர்கள் திட்டம் வைத்திருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் அவரை மெகா ஏலத்தில் மீண்டும் … Read more

பெங்களூரு : டிச. 3 வரை ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு இங்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் வலுவிழந்த நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழையை கொட்டித் தீர்த்தது. தற்போது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்ததாக பெங்களூரில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. … Read more