கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு! அமைச்சர் வேலு தகவல்…

திருவண்ணாமலை : ஃபெஞ்சல்  புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அங்குள்ள மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு,  நிலச்சரிவு எற்பட்ட பகுதியில் பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு வர இருப்பதாக தெரிவித்தார். ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த சூறாவளியுடன் பேய்மழை கொட்டியது.  நேற்று அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள … Read more

தமிழ்நாடு வெள்ள பாதிப்பு: மக்களவையை ஒத்திவைக்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

புதுடெல்லி, வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, ‘பெஞ்சல்’ என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘பெஞ்சல்’ புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து ‘பெஞ்சல்’ புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் … Read more

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியினர் அபார வெற்றி 

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (01) இடம்பெற்ற போட்டியில் இலங்கை வீரர்கள் 131 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டினர்.  நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி வீரர்கள் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியினர், அனைவரும் ஆட்டமிழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.   இலங்கை இன்னிங்ஸை பலப்படுத்திய சரூஜன் சண்முகநாதன் 132 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்களைப் … Read more

திருவண்ணாமலை: `புதையுண்ட வீடுகள்; 18 மணி நேரம்; 7 பேரையும் உயிருடன் மீட்க வேண்டும்' – இ.பி.எஸ்

தொடர் கனமழையின் காரணமாக, திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மண் அரிப்பு காரணமாக திருவண்ணாமலை மலையில் இருந்து ராட்சதப் பாறை ஒன்று சரிந்திருக்கிறது. இதனால், பெரும் மண் குவியல் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது சரிந்திருக்கிறது. அந்த மண் சரிவில் வீடு ஒன்று முழுமையாக மண்ணில் புதைந்துள்ள நிலையில், அந்த வீட்டில் இருந்த 7 பேரின் நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. திருவண்ணாமலை மண் சரிவு … Read more

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பின

காஞ்சிபுரம்/குன்றத்தூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதில் மொத்தம் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 528 ஏரிகளில் 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 163 ஏரிகள் 75 சதவீதமும், 160 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நீர் நிரம்பியுள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், … Read more

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் மோசடி: ஆடைகளை களைய செய்து கொடூரம்

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் ரூ.1.8 லட்சத்தை மர்ம நபர் பறித்துள்ளார். அதோடு வீடியோ காலில் அந்த பெண்ணின் ஆடைகளை களைய செய்து கொடூமைப்படுத்தி உள்ளார். ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர். போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, … Read more

37வது வயதில் நடிப்பில் இருந்து ஓய்வை அறிவித்த பிரபல நடிகர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

Vikrant Massey Announces Retirement: 12th Fail படத்தின் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்த நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 2025ம் ஆண்டு முதல் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழை – மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்…

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை வெள்ளத்தில் அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்ட சோகம் நடைந்தேறியுள்ளது. பெஞ்சல்  புயல்  சென்னையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில்,  அது கடைசி நேரத்தில் திசை மாறிச்சென்றது. இதனால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து,  வட மாவட்டங்களில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதன்  … Read more

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை 

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 டிசம்பர் 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 டிசம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய … Read more

Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்… எல்லோருக்கும் ஏற்றதா?

Doctor Vikatan: நகரங்களில் இன்று நிறைய இடங்களில் பருத்திப்பால் கிடைக்கிறது. அது ஆரோக்கியமானது என்கிறார்கள். பருத்திப்பால் உண்மையிலேயே நல்லதா… எல்லோரும் எடுத்துக் கொள்ளலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் பருத்திப்பால் என்பது உண்மையில் ஆரோக்கியமான பானம்தான். அதற்கு நிறைய மருத்துவ பலன்கள் உள்ளன. குறிப்பாக, மலமிளக்கியாகச் செயல்படும் தன்மை பருத்திப்பாலுக்கு உண்டு. இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் தவறான உணவுப்பழக்கம் காரணமாக பலருக்கும் மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. அதற்கு பருத்திப்பால் நல்ல தீர்வளிக்கும். … Read more