மகாராஷ்டிராவில் டிச.5-ல் பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு

மகாராஷ்டிராவில் டிசம்பர் 5-ம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 280 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜக 132, ஷிண்டே அணி 57, அஜித் பவார் அணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 23-ம் தேதி தேர்தல் … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் பெஞ்சல் புயல்

சென்னை வானிலை  ஆய்வு மையம் அடுத்த 12 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் என அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் பெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் கரையை கடக்க தொடங்கிய நிலையில் நேற்று இரவு 10.30 – 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ள நிலையில் கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும் கடந்த 3 … Read more

சென்னை: Just Miss… தடுமாறிய விமானம்; லாவகமாக இயக்கிய விமானி; குவியும் பாராட்டு!

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையே மரக்காணம் அருகில் நேற்று (நவ.30) இரவு 11.30 மணியளவில் கரையைக் கடந்தது. இதனால், சென்னை, திருவள்ளூர், மாமல்லபுரம், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் வட கடலோரப் பகுதிகளில் பலத்தக் காற்றுடன் அதிகனமழை பெய்து வந்தது. இந்த சீரற்ற வானிலைக் காரணமாக சிங்கப்பூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. Abolsutely insane videos emerging of planes trying to land … Read more

ஃபெஞ்சல் புயல், கனமழையால் பெரம்பலூரில் 1,000+ ஏக்கரில் பயிர்கள் சேதம்

பெரம்பலூர்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் காற்றில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கரும்பு, மரவள்ளிப் பயிர்கள் சேதமடைந்தன. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துக்கொண்டிருந்தது. அவ்வ்ப்போது வேகமான காற்றுடன் பலமாகவும், பெரும்பாலான நேரம் தூறலாகவும் மழை இருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. காட்டாறுகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் வேப்பந்தட்டை, மலையாளப்பட்டி, அரும்பாவூர், அ.மேட்டூர், கிருஷ்ணாபுரம், தழுதாளை … Read more

“சிறுபான்மையினர் விஷயத்தில் இந்தியாவும் வங்கதேசமும் ஒன்று” – மெகபூபா முஃப்தி பேச்சால் சர்ச்சை

ஸ்ரீநகர்: “வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது போல இந்தியாவிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று மெகபூபா முஃப்தி பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. மக்கள் ஜனநாயகக் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவரும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி, “வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுறது. அதே போல இந்தியாவிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அப்படியென்றால் இந்தியாவுக்கும் … Read more

குரான் அவமதிப்பு : ஆம் ஆத்மி எம் எல் ஏ வுக்கு 2 ஆண்டுகள் சிறை

மலேர்கோட்டா ஆம் ஆத்மி எம் எல் ஏ நரேஷ் யாதவுக்கு குரான் அவமதிப்பு வழக்கில்  2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்டா மாவட்டதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில பக்கங்கள் கிழக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவத்தால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்துமோதல் வன்முறையாக மாறி, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. காவல்துறையினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் உள்பட 4 பேர் … Read more

தி.மலை மாவட்டத்தையும் திணறிடித்த ஃபெஞ்சல் புயல் – மழை, வெள்ளத்தில் மக்கள் அவதி

புதுச்சேரி, விழுப்புரம் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தையும் ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் வரை மிதமான மழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கியபோது, மழை கொட்டத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழையின் தாக்கம் தீவிரமானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையிலிருந்து … Read more

தெலங்கானா என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் எட்டூர்நகரம் என்ற இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ளது எட்டூர்நகரம். இங்கு பழங்குடியினர் இருவரை மாவோயிஸ்ட்டுகள் பிடித்துச் சென்றனர். அவர்களை போலீஸாருக்கு தகவல் அளிப்பவர்கள் என குற்றம்சாட்டி மாவோயிஸ்ட்டுகள் தூக்கிலிட்டு கொன்றனர். இதையடுத்து அங்கு மாவோயிஸ்ட் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா க்ரேஹவுண்ட்ஸ் கமாண்டோக்கள் விரைந்து சென்று தேடுல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்களுக்கும், கமாண்டோக்களுக்கும் இடையே துப்பாக்கி … Read more

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை எழுப்பிய சரமாரி கேள்விகள்!

விஜய் அரசியலுக்கு வருவதற்கு பாஜக பயப்படவில்லை என்றும், உதயநிதியை துணை முதல்வராகியதால் திமுக ஒரு குடும்ப கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.