புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இருவர் உயிரிழப்பு: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். மேலும், விரைவில் மின்விநியோகம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் புயலின் தாக்கத்தினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின்பு உள்துறை அமைச்சர்நமச்சிவாயம் கூறுகையில், “மேட்டுப்பாளையம் மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் நகர் ஆகிய இடங்களில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை … Read more

சராசரி திருமண செலவு ரூ.36.5 லட்சமாக உயர்வு: ‘வெட்மிகுட்’ நிறுவனம் ஆய்வு அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டில் திருமண செலவு சராசரியாக 7% அதிகரித்து ரூ.36.5 லட்ச​மாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. திருமண வைபவம் ஆண்டு​தோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. இதனால் இதற்கான செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ‘வெட்​மிகுட்’ நிறு​வனம் 3,500 தம்ப​தி​களிடம் கருத்துகளை கேட்டு ஒரு ஆய்வு நடத்​தி​யது. இதில் 9% பேர் தங்கள் திரு​மணத்​துக்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவிட்​டதாக தெரி​வித்​தனர். மேலும் 9% பேர் ரூ.50 லட்சம் முதல் … Read more

வங்கதேசத்தில் இந்திய முகவர் எனக்கூறி மூத்த பத்திரிகையாளர் முற்றுகை

டாக்கா: வங்கதேசத்தில் மூத்த பெண் பத்திரிகையாளர் முன்னி சாஹாவை இந்தியாவின் உளவாளி எனக் கூறி கும்பல் ஒன்று நேற்று (சனிக்கிழமை) முற்றுகையிட்டது. பின்பு அவர் போலீஸாரால் மீட்கப்பட்டார். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் கர்வான் பஜார் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தான் வேலைபார்க்கும் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து முன்னி சாஹா வெளியேறிய போது கும்பல் ஒன்று அவரைச் சூழ்ந்து முற்றுகையிட்டது. சாஹா ஒரு இந்திய முகவர் என்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பதவி … Read more

இந்திய அணிக்காக ரோஹித் சர்மா செய்யும் தியாகம்… ஓப்பனிங் இல்லை – இந்த இடத்தில்தான் பேட்டிங்!

India National Cricket Team: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா மீண்டும் அணிக்குள் வந்துள்ளார், ஹேசில்வுட் காயம் காரணமாக டாம் போலண்ட் ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனுக்குள் வர இருக்கிறார். அறிமுக வீரர்களை ஆஸ்திரேலியாவும் தனது ஸ்குவாடில் சேர்த்துக்கொண்டுள்ளது. முதல் போட்டி மட்டுமே நிறைவடைந்த நிலையில் இத்தொடருக்கு மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் டிச. 6ஆம் … Read more

"அந்த ஒரு விஷயம் சின்ன வருத்தத்தை உண்டாக்கிடுச்சு…" – வைரலான வேல ராமமூர்த்தி பேத்தி திருமணம்

தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே பேசு பொருளாக இருக்கும் ஒரு சம்பவம், நெல்லையை மிரட்டிய ஒரு கல்யாணம்தான். சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமிக்கத் தவறவில்லை இந்தத் திருமண செய்தி. நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் மகள் வழிப் பேத்தி வைஷ்ணவிக்கும் தென் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் ஆர்.எஸ். முருகனின் மகன் விஜய ராகுலுக்கும் நவம்பர் 17ஆம் தேதி நடந்த திருமணம்தான் அது. தங்கத்தில் மாலை, ஆபரணங்கள் பதிக்கப்பட்ட புடவை ஜாக்கெட், வரதட்சணையாக ஐநூறு சவரன் … Read more

வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும்  ; கிம் ஜாங் உன்

பியாங்பாக் வடகொரியா எப்போதுமே ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதால் ரஷ்யா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன.இந்நாடுகள்  ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது  இவ்விரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் … Read more

எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினம் – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, இந்தியாவின் சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ‘எல்லை பாதுகாப்பு படை'(BSF) சுமார் 2.65 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய எல்லை காவல் படையாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று எல்லை பாதுகாப்பு படையின் எழுச்சி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லை பாதுகாப்பு படைக்கு எழுச்சி … Read more

சையத் முஷ்டாக் அலி கோப்பை: கர்நாடகா அபார பந்துவீச்சு.. 90 ரன்களில் சுருண்ட தமிழக அணி

இந்தூர், 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி ஆரம்பம் முதலே கார்நாடகா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்களான பாபா இந்திரஜித் (5 ரன்கள்), ஜெகதீசன் (0), … Read more

Fengal Cyclone: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழை; புதுச்சேரியைப் புரட்டிய புயல் | பாதிப்பு வீடியோக்கள்

புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டு படகில் கொண்டு செல்கின்றனர் ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடம்: புதுச்சேரி வெங்கட்டா நகர் புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் சாமியார் தோப்பில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வேகமான காற்றால் நேற்றிரவு வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் … Read more