FBI இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் பட்டேலை நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதுகுறித்து தனது சமூகவலை தளத்தில் கூறியிருப்பதாவது, “எஃப்பிஐ-ன் அடுத்த இயக்குநராக காஷ்யப் ‘காஷ்’ பட்டேல் பணியாற்றுவார் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். காஷ் ஒரு சிறந்த வழக்கறிஞர், துப்பறிவாளர் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், நீதியை பாதுகாப்பதற்கும், அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும் தனது வாழ்நாளை செலவிட்ட அமெரிக்கா … Read more

7 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டர்… சிக்கிய முக்கிய தலைவர்… தெலங்கானாவில் பரபரப்பு

Telangana Maoist Encounter: தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்த 7 பேரை, மாவோயிஸ்ட் ஒழிப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதன் விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

கனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Dengue | மழைகாலங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. 

விசிக நிர்வாகி நூல் வெளியீட்டு விழா : விஜய் பங்கேற்பு – திருமாவளவன் புறக்கணிப்பு

சென்னை’ நடிகர் விஜய் பங்கேற்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் நூல் வெளியீட்டு விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார். வரும் 6-ம் தேதி சென்னையில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜனா நிறுவனத்தின் நூல் வெளியீட்டு விழா நடக்க இருந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும்,விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தஒ புத்தகத்தை விஜய்  வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆயினும், தற்போது இருக்கும் … Read more

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது – ஆயுதங்கள் பறிமுதல்

இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் 1½ ஆண்டுகளுக்கும் மேலாக கலவரத்தின் பிடியில் சிக்கியது. அங்கு அண்மையில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை மீறியும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காக்சிங் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் மீது மர்ம கும்பல் தாக்குதல் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..? வெளியான தகவல்

துபாய், 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் … Read more

வங்காளதேசத்தில் மேலும் 2 சாமியார்கள் கைது

டாக்கா, வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை மக்களுக்கு எதிராக அராஜகங்கள் நடந்து வருகின்றன. இந்துக்களின் கடைகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் … Read more

விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் தினத்தை பிரச்சாரம் செய்து பொதுமக்களை அமைதியின்மைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது – குற்றப் புலனாய்வு திணைக்களம்

நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முகநூல் ஒன்றினூடாக வெளியிடப்பட்டமை, மற்றும் கடந்த வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் தின கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகள், இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட நினைவேந்தல் தினம் என்று வெளிப்படுத்தி, முகநூல் வழியாக வதந்திகளை வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது … Read more

திண்டுக்கல்: நாட்டு மாடுகளைக் காக்க மாரத்தான்; விலங்கு பொம்மைகளுடன் ஓடிய அரசுப் பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பி.வி.பி கல்லூரி சார்பில் ஜல்லிக்கட்டு நாட்டுமாடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனத் தனித்தனியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை தொழிலதிபர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மாரத்தான் ஓட்டம் பத்து வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற செங்கட்டாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வனவிலங்குகளைப் பாதுகாக்க வலியுறுத்தி விலங்குகளின் பொம்மைகளைக் கையில் … Read more

அரசுத்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு: பணியிடங்களை நிரப்ப அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு ஆள்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் அனைத்துப் பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பி மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 4% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளை அமர்த்த சிறப்பு ஆள்தேர்வுகள் நடத்தப்படும் என்று … Read more