மல்வத்து ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பிரிவினால், மல்வத்து ஓயா குறித்து 2024 நவம்பர் 27ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், வெள்ள அபாய நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுமிடத்து, அதுதொடர்பான முன் அறிவிப்புகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் … Read more

முடிவுக்கும் வரும் பதவிகள்; எப்போது உள்ளாட்சித் தேர்தல்? ஆளும் தரப்பின் முடிவு என்ன?

தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., தே.மு.தி.க., பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிடமும் தற்போது பெரும் விவாதமாக எழும்பியிருக்கும் விவகாரம், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்?” என்பதுதான். வரும் ஜனவரி மாதத்துடன் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பதவிக்காலம் முடிகிறது. எனவே, அதற்கான தேர்தலை இப்போதைக்கெல்லாம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த அறிவிப்பையும் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. ஆளும் தி.மு.க அரசும் அதற்கான முயற்சிகளில் இறங்கியதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, ‘உள்ளாட்சி ஜனநாயகம்’, … Read more

கனமழை: சென்னையில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன் (20). இவர், மண்ணடியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். நேற்று காலை பணம் எடுப்பதற்காக மண்ணடி பிரகாசம் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்-க்கு சென்றுள்ளார். ஏடிஎம் மையத்தின் வெளியே மழைநீர் தேங்கி இருந்தது. சந்தன், ஏடிஎம் மையத்தின் அருகில் இருந்த இரும்புக் கம்பியை பிடித்து படிக்கட்டில் ஏற முயன்றார். இரும்பு கம்பியை தொட்டதும், சந்தன் … Read more

கேரள மாநில ஓய்வூதிய திட்டத்தில் மோசடி: பயனாளி பட்டியலில் சொகுசு கார் உரிமையாளர்

திருவனந்தபுரம்: கணவரை இழந்த பெண்​கள், ஆதரவற்ற மூத்த குடிமக்​கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நலிவுற்ற பிரி​வினருக்கு கேரள அரசு சார்​பில் மாதம் ரூ.1,600 ஓய்வூ​தியம் வழங்​கப்​படு​கிறது. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மாநில நிதித் துறை சார்​பில் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் பல்வேறு முறை​கேடுகள் அம்பல​மாகி உள்ளன. இதுகுறித்து கேரள நிதித் துறை வட்டாரங்கள் கூறிய​தாவது: கேரளா​வின் கோட்​டக்கல் பகுதியில் 42 பேருக்கு ஓய்வூ​தியம் வழங்​கப்​படு​கிறது. இதில் ஒரு பயனாளி பல ஆண்டு​களுக்கு முன்பே உயிரிழந்​து​விட்​டார். ஆனால் அவரது … Read more

தன் ட்விட்டர் X பக்கத்தை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?

Vignesh Shivan Deactivates His Twitter X : பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தை டெலிட் செய்திருப்பது தற்பாேது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   

சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளை விட… அதிரடி ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ள 3 அணிகள் என்ன?

IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் மீது தற்போதே அதிக எதிர்பார்ப்பு எழத்தொடங்கியுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த நவ.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் 10 அணிகளும் தங்களுக்கான அணியை கட்டமைத்திருக்கிறது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸில் … Read more

மதமாற்ற தடை சட்டத்துக்கு ராஜஸ்தான் அமைச்சரவை ஒப்புதல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மதமாற்ற தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர்  பஜன் லால் சர்மா ‘எக்ஸ்’ தளத்தில், “கட்டாய மதமாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இதன்படி சட்டமன்றத்தில் ‘ராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதா- 2024’ -ஐ தாக்கல் செய்ய அமைசரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல், மோசடி அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் ஒரு நபரின் மதத்தை மாற்றும் முயற்சியை இந்த சட்ட மசோதா … Read more

குஜராத்தில் 3 சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

காந்திநகர், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமிகள் 4 பேர் நேற்று முன்தினம் மாலை தங்களின் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளிர் அதிகமாக இருந்ததால் நெருப்பு மூட்டி குளிர்காய்வதற்காக சிறுமிகள் அங்கிருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு மூட்டினர். சிறுமிகள் 4 பேரும் நெருப்பை சுற்றி நின்று கொண்டு குளிர் காய்ந்தபோது திடீரென வாந்தி எடுத்தனர். பின்னர் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகள் 4 … Read more

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் நேற்று (30) பார்வையிட்டார். நாட்டின் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 155 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடமான மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் சேதமடைந்துள்ளது.  இது தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு சென்றார் . சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்ட … Read more

FBI தலைவராகும் இந்திய வம்சாவளி நபர்… டிரம்ப் போட்ட சரவெடி – யார் இந்த காஷ்யப் பட்டேல்?

Kashyap Patel: அமெரிக்காவின் உயரிய விசாரணை அமைப்பான FBI-இன் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான காஷ்யப் பட்டேலை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.