“திமுக ஆட்சியில் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் நிலை' – ஆர்.பி.உதயகுமார்

“ஸ்டாலின் அரசின் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கள்ளச்சாராய சாவு, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் கொடுமைகள் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது..” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். ஆர்.பி உதயகுமார் பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட … Read more

தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த ஓயாது உழைப்போம்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: “தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் … Read more

கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் உத்தரவு

புதுடெல்லி: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி நிமிஷா பிரியா கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச … Read more

குடிபோதையில் வாகனத்தை இயக்கினால்… காவல்துறை கொடுத்த எச்சரிக்கை!

New year Party: புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்’ செல்ல தடை; மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கஞ்சாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. மகன் உள்பட 9 பேர் கைது

திருவனந்தபுரம் கேரள மாநிலம் காயம்குளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் எம்.எல்.ஏ. பிரதிபா. ஆலப்புழை மாவட்டம் குட்டநாட்டில் உள்ள தகழி பாலத்துக்கு அடியில் புகை பிடித்துக் கொண்டிருந்த ஒரு கும்பலிடம் கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கும்பலில் ஒருவரிடம் கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கும்பலில் இருந்த 9 பேரை அவர்கள் கைது செய்தனர். கைதானவர்களில் பிரதிபா எம்.எல்.ஏ.வின் மகனும் அடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், 9 பேரும் ஜாமீனில் … Read more

ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அறிவுரை

மெல்போர்ன், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் … Read more

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அட்டோக் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பஸ் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் … Read more

ம.பி: சிறுத்தையைப் பிடிக்கக் கொசுவலையுடன் புறப்பட்ட பாஜக தலைவர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா என்ற இடத்தில் ஒரு சிறுத்தை பொதுமக்களைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தது. கடந்த சில நாட்களில் 5 பேரை அந்த சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தி இருந்தது. இதில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். இது குறித்து உள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் மனிதர்களைத் தாக்கும் சிறுத்தை பிடிபடவில்லை. இதையடுத்து உள்ளூர் பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சியாம்லால் திவேதி உள்ளூர் மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு, எந்த வித ஆயுதமும் இல்லாமல் சிறுத்தையைப் பிடிக்கக் கிளம்பிச் … Read more

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை நாளைமுதல் அமல்

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வே புதிய … Read more

போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் 40 ஆண்டுக்குப் பின்னர் அகற்ற முடிவு

போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவுகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984-ல் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த நச்சுக்கசிவின் காரணமாக போபாலில் 5,479 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பு அப்பகுதியில் இன்னும் இருப்பதாக மக்கள் அச்சம் கொள்கின்றனர். இந்நிலையில் யூனியன் கார்பைட் பூச்சிக் கொல்லி தொழிற்சாலையில் 377 மெட்ரிக் டன் எடையுடைய … Read more