கிரிமினல்கள் அச்சுறுத்தலில் சிக்கிய ஒரு குட்டி தீவு தேசம்: அவசர நிலை பிறப்பித்த பிரதமர்!

ஒரு குட்டி தீவு தேசத்தில் கிரிமினல்களின் அட்டூழியத்தால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நம் ஊரில் சினிமா கதைக் களமாக இருக்கும் ’கேங் ஊர்’ ஒரு நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத்துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1820-களில் இந்தியர்களை … Read more

Sawadeeka: "அஜித் 102 டிகிரி காய்ச்சலோடு டான்ஸ் பண்ணார்" – 'விடாமுயற்சி' கல்யாண் மாஸ்டர் பேட்டி

‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘Sawadeeka’ வெளியாகி அஜித் ரசிகர்களை வைப் ஏற்றிக்கொண்டிருக்கிறது. விஸ்வரூப வெற்றியை வேட்டையாட வெறித்தனமான முயற்சிகளுடன் பொங்கலுக்கு ரிலீஸாகிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’. படம் எப்போ ரிலீஸ் ஆகும்? எனக் கேட்டவர்களுக்கெல்லாம் ‘கொஞ்சம் பொருங்க பாய்’ எனச் சொல்லும் அளவுக்கு தாமதாகியிருந்தாலும் டீசர் அதனைத்தொடர்ந்து, தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை எகிறவைத்திருக்கிறது. குறிப்பாக, அஜித்தின் டான்ஸ் மூவ்மென்ட்கள்தான் சோஷியல் மீடியாவில் ஸ்டெப் பை ஸ்டெப் பாராட்டுகளை குவித்துவருகிறது. அஜித்தின் அல்டிமேட் டான்ஸரான … Read more

டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

புதுடெல்லி, டெல்லியில் 70 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்தவகையில் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 100, முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை, ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி … Read more

அது மட்டும் இல்லையென்றால் ரோகித் சர்மா… – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 184 ரன்கள் … Read more

எத்தியோப்பியாவில் லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா நாட்டின் கிராமப்பிற பகுதிகளில், திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக லாரிகளை வாடகைக்கு எடுப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவை மலிவு விலையில் கிடைப்பதாலும், பலரை ஏற்றிச் செல்ல முடிவதாலும், காலாச்சார ரீதியாக மக்கள் இவ்வாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த … Read more

30 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி டிசையர்..!

16 ஆண்டுகள் 11 மாதங்களை எடுத்துக் கொண்டு 30 லட்சம் உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் காரின் அறிமுகம் முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தற்பொழுது 4வது தலைமுறை டிசையர் விற்பனையில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் டிசைரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை வெளியானது. 4வது தலைமுறை டிசையர் நவம்பர் 2024ல் ஸ்விஃப்ட் மாடலை … Read more

மாணவி வன்கொடுமை: "FIR வெளியே கசியக் காரணம் இதுதான்…" – தேசிய தகவல் மையத்தின் விளக்கமென்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆர் இணையத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். எப்.ஐ.ஆர் கசிந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. இதுகுறித்து விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது உயர் நீதிமன்றம். மேலும், சம்பந்தப்பட்ட … Read more

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

சென்னை: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும், கடந்த ஆண்டு ஏப்ரல் … Read more

தீவிரவாத செயல் பற்றி திட்டமிடுவதும் தீவிரவாதமே: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு தீவிரவாத செயலை பல ஆண்டுகளாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தாமல் இருந்தாலும் அது தீவிரவாதமே என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டதற்கு எதிராக அல்-காய்தா உறுப்பினர் ஒருவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிரதிபா எம். சிங், அமித் சர்மா ஆகியோரை கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில், “சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பிரிவு … Read more

“மியூசிக் போடாம 2 வருஷம் ஜோசியம் பார்த்தேன்'' – `காதல்' பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதர்

பாலாஜி சக்திவேலின் `காதல்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜோஷ்வா ஶ்ரீதர். இவருடைய பாடல்கள் பலவும் எவர்கிரீனாக பலரின் ஃபேவரிட்டாக இருக்கிறது. இப்படியானவர் கொரோனா சூழலுக்குப் பிறகு எந்தத் திரைப்படத்திற்கும் இசையமைக்கவில்லை. இது குறித்து கேட்டால், “அது நானாக எடுத்து முடிவுதான்!’ என்கிறார். `ஏன் இந்த முடிவு?’ என்ற கேள்வியுடன் தொடங்கிய இந்த உரையாடல் அவருடைய கரியரின் பல பக்கங்களைப் புரட்டியது. நம்மிடையே பேச தொடங்கிய ஜோஷ்வா ஶ்ரீதர், “2020-லதான் முழுமையாக இசையமைப்பதை நிறுத்தினேன். அதுக்கு முன்னாடி … Read more