விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. இந்தியாவின் கனவுத் திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்காக பல்வேறு பரிசோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது.விண்ணில் செயற்கைக்கோள் களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில்நுட்ப அறிவு அதாவது ‘விண்வெளி டாக்கிங் பரிசோதனை’ என்ற பணிக்காக இஸ்ரோ ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ … Read more

விராட் இல்லை.. இந்தியாவின் புதிய கிங் அவர்தான் – ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்

மெல்போர்ன், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி முடிவடைந்துள்ளது. மெல்போர்னில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு டிராவும் கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்திய அணியின் … Read more

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

வாஷிங்டன், அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர் (வயது 100). இவர் 1977 முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் நேற்று காலமானார். ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் ஜிம்மி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தினத்தந்தி Related Tags : … Read more

Udhayam Theatre: `இடத்தை அவங்க வாங்கிட்டாங்க' – மூடப்பட்ட உதயம் திரையரங்கம்; உறுதி செய்த மேலாளர்

சென்னை அசோக் நகரிலுள்ள உதயம் திரையரங்கம் குறித்துப் பேசுவதற்கு பல கதைகள் இருக்கின்றன. இன்று உச்சத்தில் இருக்கும் பல நடிகர்கள் தங்களின் ஆதர்ச கதாநாயகன்களை கொண்டாடித் தீர்த்த இடம் உதயம் திரையரங்கம். உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என நான்கு திரைகளுடன் இயங்கி வந்த இத்திரையரங்கம்,1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 41 வருடங்களாக பலரின் பொழுதுபோக்கிற்கு முக்கிய இடமாக விளங்கிய உதயம் திரையரங்கம் நிரந்தமாக மூடப்பட்டது. 10, 15 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மேள தாள … Read more

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்பத்தை இழந்து தவிக்கும் மாணவியின் தங்கைகளுக்கு இளைஞருக்கான அபராதத்தில் இருந்து ரூ.25 ஆயிரமும், தமிழக அரசு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த மாணிக்கம் – தலைமைக் காவலர் ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யபிரியா. … Read more

கேரளாவில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ படுகாயம்

கேரளாவின் கொச்சி நகரில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ உமா தாமஸ் படுகாயம் அடைந்தார். கேரளாவின் கொச்சி நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் கின்னஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் நேற்று முன்தினம் நடனம் ஆட இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் திருக்காட்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபிக்களுக்காக … Read more

எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான், தலிபான் இடையே கடும் சண்டை

எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். தலிபான் வீரர்களின் தாக்குதலில் 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் மூத்த தலைவர் முகமது ஹசன் … Read more

மகளிர் உரிமை தொகையில் உயர்வு? பட்ஜெட்டில் வரவிருக்கும் மாஸான அறிவிப்பு?

Kalaignar Magalir Urimai Thogai:தமிழக அரசு வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளது.

IND vs AUS: ரோஹித் சர்மா நீக்கம்! கேப்டனாகும் பும்ரா! 5வது டெஸ்ட்டிற்கான இந்திய அணி அறிவிப்பு!

மெல்போர்னில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரை 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5வது நாளில் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இந்தியா 2வது இன்னிங்ஸில் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த … Read more

பி.எஸ்.எல்.வி. – சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்

சென்னை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. ‘ஸ்பேடெக்ஸ்-ஏ’, ‘ஸ்பேடெக்ஸ்-பி’ என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் … Read more