அமெரிக்க விமான விபத்தில் 67 பேர் பலி… விமானத் தரவு மற்றும் குரல் பதிவுகள் மீட்பு…

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் நேற்று, ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெட் விமானத்தில் பயணம் செய்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் தவிர ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்கள் என மொத்தம் 67 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. போடோமேக் ஆற்றின் மீது நிகழ்ந்த இந்த விபத்தில் ஜெட் விமானம் … Read more

ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்- கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி

புதுடெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நரேஷ் யாதவ் (மெஹ்ராலி), ரோஹித் குமார் (திரிலோக்புரி), ராஜேஷ் ரிஷி (ஜனக்புரி), மதன் லால் (கஸ்தூரிபா நகர்), பவன் சர்மா (ஆதர்ஷ் நகர்), மற்றும் பாவ்னா கவுட் (பாலம்). பி.எஸ்.ஜூன் (பிஜ்வாசன்) ஆகிய 7 எம்எல்ஏக்களும் … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்கால் டைகர்ஸ்

ரூர்கேலா, 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ், தமிழ்நாடு டிராகன்ஸ், சூர்மா ஆக்கி கிளப் மற்றும் ஐதராபாத் டூபான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் – தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற … Read more

செனட் சபையில் பெற்றோரை 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' என்று கூறி வரவேற்ற எப்.பி.ஐ. இயக்குநர்

வாஷிங்டன், அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்றார். அவரது மந்திரிசபை மற்றும் வெள்ளை மாளிகையின் பல்வேறு உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.(FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல் என்பவரை டிரம்ப் நியமனம் செய்தார். டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான காஷ்யப் பட்டேலை எப்.பி.ஐ. இயக்குநராக நியமிக்கும் பரிந்துரையை உறுதிப்படுத்துவதற்கான செனட் உறுப்பினர்களின் விசாரணை … Read more

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க ஆயத்தம்: ரயில்வே அமைச்சகம் தேதியை விரைவில் அறிவிக்கிறது

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான தேதியை ரயில்வே அமைச்சகம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்ததால் இந்தப் பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளுக்கு 2019 மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து ரூ.535 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின. புதிய ரயில் பாலம் 2,078 … Read more

இன்னும் இருக்கிறதுதானே இண்டியா கூட்டணி? – ஓர் அலசல்

2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி ‘இடி முழக்கம்’ போல் உருவானது இண்டியா கூட்டணி. ஆர்ப்பரிப்புடன் உருவான அக்கூட்டணி தேர்தல் முடிவுகள் மூலம் சிறு நம்பிக்கையையும் கடத்தியது. ஆனால், சமீபகால போக்குகள் ‘இண்டியா கூட்டணி இன்னும் இருக்கிறதுதானே?!’ என்ற கேள்வியை எழுப்புகிறது. அந்த சந்தேகத்தின் நிமித்தமாக ஒரு பார்வை… நெருக்கடியால் உதயமானதா? – கடந்த மக்களவைத் தேர்தல் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்குமா? தொடர்ந்து 3-வது முறை பிரதமராகி மோடி … Read more

உஷார் : வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிப்பு… சென்னை காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிக்கப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த நூதன மோசடி குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, தங்களது செல்போனுக்கு தவறுதலாக ஆறு இலக்க WhatsApp ACTIVATION CODE-ஐ அனுப்பிவிட்டதாக பேசி, அதனை பெற்று, வாட்ஸ் அப்பை ஹேக் செய்வதாக கூறியுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ் அப் மூலம் அவரது உறவினர்கள், நண்பர்களை தொடர்புகொண்டு பணத்தை பறிப்பதாக எச்சரித்துள்ளனர். வாட்ஸ் அப் ஆக்டிவேஷன் கோடு கேட்டு யாரெனும் தொடர்புகொண்டால் உடனடியாக … Read more

கும்பமேளா நெரிசல் உயிரிழப்புகள்: பிரயாக்ராஜில் நீதி விசாரணைக் குழு ஆய்வு

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60க்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மகா கும்பமேளாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்தக் குழு இன்று பிரயாக்ராஜ் சென்று ஆய்வைத் தொடங்கியது. அலகாபாத் ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையிலான இந்த … Read more

டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த சாகிப் மக்மூத்

புனே, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 4-வது போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேமி சுமித் மற்றும் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாகீப் மக்மூத் ஆகியோர் இடம்பெற்றனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் அடித்தது. இதன் பின் … Read more

புதிய கரன்சியை உருவாக்க முயன்றால்… பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக பிரிக்ஸ் நாடுகள் புதிய கரன்சியை உருவாக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றபின் இதுபற்றி கருத்து தெரிவித்த டிரம்ப், வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு கரன்சியை உருவாக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதிபராக பதவியேற்ற பின் மீண்டும் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள … Read more