சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான , காவல்துறையின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் 14 நபர்களை சென்னை மாநகர காவல் துறை கண்காணித்து வருவதாகவும், இரண்டு ஊடகங்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அங்கு படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி, திமுக பிரமுகர் ஞானசேகரன் என்ற நபரினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு […]