சென்னை: மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தில் சேர கடந்த 20 நாட்களில் 8,862 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திட கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டத்தை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தார். இந்த திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் கடன் […]