தலைநகர் டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
டெல்லி அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து,பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார்.
டெல்லி நௌரோஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத் தொகுப்பு குடியிருப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லி துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3 புதிய திட்டங்களுக்கு அவர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன்படி சூரஜ்மல் விஹாரில் கல்வி வளாகம், துவாரகாவில் கல்வி வளாகம், நஜாஃப்கரின் ரோஷன்புராவில் வீர சாவர்க்கர் கல்லூரி ஆகியவை கட்டப்பட உள்ளன.