2024ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அண்மையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இவர்கள் தவிர, ஹாக்கி விளையாட்டு வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா தடகள […]