நியூயார்க்,
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து போயிங் நிறுவனத்தின் ‘ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
2 வாரங்களில் பூமிக்கு திரும்பும் செயல்திட்டத்துடன் அவர்கள் சென்ற நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் அவர்கள் 16 முறை சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்கும் அரிய வாய்ப்பை அவர்கள் கண்டுகளித்தனர்.சர்வதேச விண்வெளி மையம் புவியின் சுற்றுவட்டபாதையில் சுற்றிவரும்போது அவர்கள் சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தை காணமுடிந்தாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இந்த தகவலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட சர்வதேச விண்வெளி மையம் சூரியோதயம் மற்றும் அஸ்தமனத்தின்போது எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்துள்ளது.