நெல்சன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன நிசங்கா 14 ரன்களிலும், குசல் மென்டிஸ் 22 ரன்களும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய குசல் பெரேரா அதிரடியில் பட்டையை கிளப்ப ஸ்கோர் மளமளவென எகிறியது. நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 46 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் கை கோர்த்த கேப்டன் அசலன்கா 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது.
இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.