அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1-ம் தேதி அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் லாரியை ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது மோதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அவரது பெயர் சம்சுதீன் பாகர் ஜாபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி, ஆயுதங்கள், வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது.