கோவை: கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்தால், லாரியில் இருந்து கேஸ் வெளியாகி வருவதால், அருகே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி கேஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி வந்தது. கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு சென்று கொண்டிருந்த போது, உப்பிலிபாளையம் மேம்பாலத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை குப்புற கவிழ்ந்தது. கோவை உப்பிலிபாளையம் அவிநாசி […]