திருப்பதி,
திருப்பதி அருகே காாில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் நேற்று திருப்பதி அருகே சீலா தோரணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி கோதனை செய்தனர்.
அதில் 10 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 10 செம்மரக்கட்டைகள், கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :