‘நீட்’ குறித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழு​வின் பரிந்​துரைகள் அமல்படுத்தப்​படும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு உறுதி அளித்​துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பு​களில் சேர ஆண்டு​தோறும் தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்​வின்​போது வினாத்​தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறை​கேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 40-க்​கும் மேற்​பட்ட மனுக்கள் தாக்கல் செய்​யப்​பட்டன. இந்த மனுக்களை விசா​ரித்த 3 நீதிப​திகள் அமர்வு, நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து​விட்​டது. எனினும், நீட் தேர்​வில் முறை​கேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு மத்திய அரசுக்கு நீதிப​திகள் உத்தர​விட்​டனர்.

உச்ச நீதி​மன்​ற அறிவுரைப்படி, நீட் தேர்வு நடைமுறைகளை ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் இஸ்ரோ முன்​னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை​யில் 7 பேர் கொண்ட சிறப்பு குழு நியமிக்​கப்​பட்​டது. இந்த குழு​வில் ரன்தீப் குலேரியா, பி.ஜே.ராவ், ராமமூர்த்தி, பங்கஜ் பன்சால், ஆதித்ய மிட்​டல், கோவிந்த் ஜெய்ஸ்​வால் உள்ளிட்​டோர் இடம்​பெற்றனர்.

நாடு முழு​வதும் பல்வேறு தரப்​பினரின் கருத்துகளை சிறப்பு குழு கேட்​டறிந்​தது. இதில், சுமார் 35,000-க்​கும் மேற்​பட்ட ஆலோசனைகள் பெறப்​பட்டன. இதுகுறித்து தீவிரமாக பரிசீலிக்​கப்​பட்​டது. அத்துடன், நீட் தேர்வை நடத்​தும் தேசிய தேர்வு முகமை​யின் (என்டிஏ) நடைமுறை​களை​யும் சிறப்பு குழு முழு​மையாக ஆய்வு செய்​தது. 2 மாதங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் குழு தனது பரிந்​துரைகளை மத்திய கல்வித் துறை​யிடம் சமர்ப்​பித்​தது.

‘காகித தேர்வுத்​தாள் நடைமுறையை தவிர்த்து ஆன்லைன் முறை​யில் நீட் தேர்வை நடத்த வேண்​டும். அரசு கல்வி நிறு​வனங்​களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்க வேண்​டும். தனியார் கல்வி நிறு​வனங்​களில் அமைக்​க ​கூடாது. ஜேஇஇ தேர்வு போல, 2 கட்டங்​களாக நீட் தேர்வை நடத்​தலாம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்​துரைகளை ராதாகிருஷ்ணன் குழு வழங்கியுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நீட் தேர்வு தொடர்பான வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்​பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ராதாகிருஷ்ணன் தலைமையிலான சிறப்பு குழு​வின் பரிந்​துரைகள் அமல்படுத்தப்​படும்’ என்று உறுதி அளித்​தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிப​திகள், அடுத்த விசா​ரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி​வைத்​தனர். ‘‘நீட் தேர்வை வழக்​கமான வினாத்​தாள் அடிப்​படை​யில் நடத்​தலாமா, ஆன்லைன் முறை​யில் நடத்​தலாமா என்பது குறித்து விரை​வில் முடிவு எடுக்​கப்​படும்’’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரி​வித்​தார். மே ​மாதம் நடக்க உள்ள நீட் தேர்வு எந்த நடை​முறை​யில் நடத்​தப்​படும் என மத்​திய அரசு ​விரை​வில் அறிவிக்​கும் என்று தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.