மதுரை: தடை மீறி போராட்டத்தில் ‘நீதி கேட்பு பேரணி’யில் ஈடுபட்ட குஷ்பு உள்பட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பல பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை டூ சென்னை ‘நீதி கேட்பு பேரணி’ அறிவிக்கப்பட்டது. […]