”வைரமுத்துவைப் பற்றி நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை” – சொல்கிறார் கங்கை அமரன்

புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகைதந்த கங்கை அமரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த காலங்களில் திரைப்படங்களில் நல்ல கதை இருந்தது. ஆனால், தற்போது வரும் திரைப்படங்களில் கதைக்கு இடமில்லை. அடி, உதை, குத்துக்குத்தான் இடம். மக்களும் அதை நோக்கிச் சென்று விட்டனர். நான் ஏற்கனவே வைரமுத்துவைப் பேசிய நிலைப்பாட்டிலிருந்து என் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தவறுகளைத் தட்டி கேட்கும் நபராக அவர் மட்டுமே உள்ளார். அவர் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் சரியானதே.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, மது கலாசாரம், போதை கலாசாரம் பெருகி வருகின்றன. போதை கலாசாரத்தால் படப்பிடிப்பு எடுக்கவே இடையூறாக உள்ளது. தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் இந்த விவகாரங்களில் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பட்டியலின சமூக மக்கள் இன்னும் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலை தான் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் கூட பட்டியல் இன மக்களுக்கான முழு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது செயல்பாடுகளை அனைவரும் எதிர்பார்ப்பதைப் போல் நானும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

கங்கை அமரன்

வேங்கைவயல் சம்பவத்தில் தவறு செய்துள்ள குற்றவாளியைக் காவல் துறையும், தமிழக அரசும் நினைத்தால் கைது செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி நினைக்கவில்லை. அரசு இந்த விவகாரத்தை முடிக்க விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசிய பேச்சு முழுமையாக வெளியில் வரவில்லை. ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் ஆக்கி வருகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம்’ என்று கூறிய தற்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு மௌனமாக இருந்து வருகிறார். மேலும், போதை கலாசாரத்தையும் ஒழிப்போம் என்று தற்போது விளம்பரம் செய்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் பாலியல் வன்கொடுமை விவரங்கள், போதை கலாசாரம் ஆகியவை பெருகிவரும் வகையில் இந்த அரசு நன்றாகச் செயல்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளி யார் என்றும் அவர் எதன் பின்னணியில் இதனைச் செய்தார் என்றும் தெளிவாக எடுத்துக் காண்பித்தும் அரசு அதை மறுக்கிறது. யாரைக் காப்பாற்றுவதற்காக அரசு இவ்வாறு செய்கிறது என்று தெரியவில்லை“ என்று கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.