Delhi: 10 லட்சம் கேட்டு சித்திரவதை செய்தாரா மனைவி? பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலையின் பகீர் பின்னணி

மனைவி கொடுமைப்படுத்தியதற்காக டெல்லியைச் சேர்ந்த பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மனிகா ஜகதீஷ் பஹ்வா என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஹோட்டலை நடத்தி வந்த நிலையில் அதை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே, அவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது மனைவி மனிகா பஹ்வா மற்றும் மாமனார்- மாமியார் சித்திரவதைச் செய்வதாக வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

புனித் குரானா- மனிகா ஜகதீஷ் பஹ்வா

“எனது மாமியார் மற்றும் என் மனைவி சேர்ந்து கொண்டு என்னைச் சித்திரவதை செய்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். கருத்து வேறுபாடு காரணமாக முதலில் பரஸ்பர விவாகரத்து கோரி விண்ணப்பித்தோம். இதற்காக நீதிமன்றத்தில் சில நிபந்தனைகளில் கையெழுத்திட்டுள்ளோம். 180 நாட்களுக்குள் அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் திடீரென எனது வரம்பைத் தாண்டி சில புதிய நிபந்தனைகளை என் மாமியார் மற்றும் என் மனைவி கூறுகிறார்கள். திடீரென கூடுதலாக 10 லட்ச ரூபாய் கேட்கிறார்கள். அவ்வளவு தொகை என்னிடம் இல்லை. எனது பெற்றோர் ஏற்கனவே பெருந்தொகை கொடுத்துவிட்டார்கள். அவர்களிடம் இதைக் கேட்க முடியாது” என்று அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

புனித் குரானாவின் சகோதரி

மேலும் இதுதொடர்பாக பேசியிருக்கும் புனித் குரானாவின் சகோதரி, “சகோதரி மற்றும் பெற்றோர்களுடன் சேர்ந்து கொண்டு எனது சகோதரனை மனரீதியாகச் சித்திரவதை செய்து துன்புறுத்தி இருக்கின்றனர். தனக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை எனது சகோதரன் வீடியோவாக ரெக்கார்ட் செய்திருக்கிறார். அது சுமார் 59 நிமிடங்கள் இருக்கிறது. பணம் கேட்டுக் கொடுமைப்படுத்தியது மட்டுமின்றி, சமூக வலைத்தள பக்கங்களையும் ஹேக் செய்து துன்புறுத்தி இருக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/JailMathilThigil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.