வாடிக்கையாளர்கள் தேவையை கருத்தில் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. உங்கள் போனை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட வேண்டுமானால், வருடத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
ஏர்டெல் அல்லது ஜியோவின் ஒரு ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டத்தை பெற நினைப்பவர்களுக்கு, இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவை தவிர்க்க விரும்பினால், வருடாந்திர திட்டத்தை நீங்கள் எடுக்கலாம். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வழங்குகிறது. இரண்டு திட்டங்களின் கட்டணமும் ரூ.3599. ஆனால் அவற்றில் கிடைக்கும் பலன்கள் வேறுபட்டவை. இங்கே, ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களில் எவ்வளவு நன்மை கிடைக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் திட்டங்களில் வரம்பற்ற டேட்டா-அழைப்பு மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகின்றன.
ரூ.3599 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோவின் ஒரு வருட ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.3599 திட்டத்தில், நீங்கள் மொத்தம் 912.5 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இதில் தினமும் 2.5 ஜிபி அதிவேக டேட்டாவைப் பயன்படுத்தலாம். இது தவிர, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசம். இதில் ஜியோ சினிமாவின் இலவச சந்தாவும் கிடைக்கும். 5ஜியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்கள் 5ஜி இணைய வசதியையும் அனுபவிக்க முடியும்.
ரூ.3599 கட்டணத்தில் கிடைக்கும் ஏர்டெல் ஒரு வருட ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல்லின் ஒரு வருட ரீசார்ஜ் திட்டமான ரூ.3599 என்ற கட்டணத்தில், சிறந்த பலன்களைப் பெறுகிறீர்கள். அதன் பயனர்களின் வசதிக்காக, நிறுவனம் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பின் நன்மையை வழங்குகிறது. ஜியோவின் தினசரி டேட்டா வரம்புடன் ஒப்பிடும்போது, ஏர்டெல்லின் வரம்பு 2ஜிபி என்ற அளவில் சற்று குறைவாக உள்ளது. ஜியோவின் திட்டத்தைப் போலவே, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களைப் பெறுவீர்கள். இதில் நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவைப் பெறுவீர்கள். இது ஏர்டெல்லின் வீடியோ செயலி ஆகும். இதில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், வெப் தொடர்கள் மற்றும் நேரடி டிவி ஆகியவற்றைப் பார்க்கலாம்.
ரூ.3999 கட்டணத்தில் கிடைக்கும் ஏர்டெல் ஒரு வருட ரீசார்ஜ் திட்டம்
மறுபுறம், நீங்கள் ஏர்டெல்லின் மற்றொரு ஆண்டு திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு உங்கள் பட்ஜெட்டை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். ஏர்டெல் அதன் ரூ.3999 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 2.5 ஜிபி டேட்டா வரம்பை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
எந்தத் திட்டம் அதிக பலன்களைத் தருகிறது?
உண்மையில், இந்த இரண்டு நிறுவனங்களும் தங்கள் ரூ.3599 திட்டத்தில் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன. ஆனால் தினசரி டேட்டா வரம்பை பார்த்தால் இதில் ஜியோ அதிக பலன்களை வழங்குகிறது. ஜியோ தனது பயனர்களுக்கு அதிக தினசரி டேட்டா வரம்பை வெறும் 3599 ரூபாய்க்கு வழங்குகிறது. ஏர்டெல் அதன் ரூ.3999 திட்டத்தில் ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.