Sakshi Agarwal Wedding: பால்யகால நண்பரை கரம் பிடித்த நடிகை சாக்‌ஷி அகர்வால்!

Sakshi Agarwal Wedding: தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் இருந்து வருபவர் சாக்‌ஷி அகர்வால். சின்ன திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷி தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

ஜனவரி 2-ம் தேதி கோவாவில் ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்‌ஷி.

“சைல்ட்ஹூட் நண்பர்கள் முதல் சோல்மேட்ஸ் ✨ கோவா வானத்தின் கீழ் காதலுக்கும் கடலலைகளுக்கும் இடையே நானும் நவ்னீத்தும் “என்றென்றைக்கும்” இணைந்திருப்பதாக சத்தியம் செய்துள்ளோம் ❤️  இதோ வாழ்நாள் முழுமைக்குமான காதல், சிரிப்பு மற்றும் முடிவில்லாத நினைவுகள்  ✨ #NakshBegins  #ChildhoodToForever ” என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி. இவரது திருமண செய்தி ரசிகர்களுக்கு இனிமையானதாக அமைந்துள்ளது.

பிரபலங்களும், ரசிகர்களும் பிக்பாஸ் சீசன் 3-ன் புகழ்பெற்ற பங்கேற்பாளர் சாக்‌ஷிக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Sakshi Agarwal Wedding
சாக்‌ஷி அகர்வால் திருமணம்
சாக்‌ஷி அகர்வால் திருமணம்
சாக்‌ஷி அகர்வால் திருமணம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.