அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி […]