சென்னை: திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. தற்போதைய தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 2006 – 2011 காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. […]