டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. இதன் விளைவு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், தோல் புண்கள் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட் அளவு கண்டறியப்பட்டுள்ளது, 20 சதவீத மாதிரிகள் அனுமதிக்கப்பட்ட நைட்ரேட் செறிவை […]