டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

புதுடெல்லி: புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) நடைபெற உள்ள நிலையில், 29 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக இன்று (ஜன. 4) வெளியிட்டுள்ளது.

பாஜக மத்திய தேர்தல் கமிட்டியின் ஒப்புதலை அடுத்து, வேட்பாளர்கள் குறித்த முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரோகினி தொகுதியில் விஜேந்தர் குப்தா, ஜனக்புரி தொகுதியில் ஆஷிஷ் சூத், பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கஹ்லோட், புதுடெல்லி தொகுதியில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முதல்வருமான அதிஷியை எதிர்த்து கல்காஜி தொகுதியில் பாஜகவின் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அல்கா லம்பா நிறுத்தப்பட்டுள்ளார்.

ஆர்.கே. புரம் தொகுதியில் அனில் சர்மா, மாளவியா நகர் தொகுதியில் சதீஷ் உபாத்யாய், பட்பர்கஞ்ச் தொகுதியில் ரவீந்தர் சிங் நேகி, மாடல் டவுனில் அசோக் கோயல் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். கரோல் பாக் (எஸ்சி) தொகுதியில் துஷ்யந்த் குமார் கவுதம் நிறுத்தப்பட்டுள்ளார். ஷாலிமார் பாக் தொகுதியில் ரேகா குப்தா நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜங்புரா தொகுதியில் பாஜக சார்பில் சர்தார் தர்விந்தர் சிங் மர்வா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் முன்னாள் மேயர் ஃபர்ஹாத் சூரியை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.