‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மதுபான பாட்டில்கள் மீது அவசியம் என்று அமெரிக்க அரசு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் அரசின் கீழ் உள்ள பொது சுகாதார துறையில் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக செயலாற்றிவரும் விவேக் மூர்த்தி இதனை வலியுறுத்தியுள்ளார். “அமெரிக்காவில் புகை பிடிப்பது மற்றும் உடல் பருமனுக்கு அடுத்தபடியாக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது முக்கிய காரணியாக மது அருந்துதல் உள்ளது” என்று விவேக் மூர்த்தியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. […]