Vodafone Idea Superhero Benefits Yearly Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு சேவை துறையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. சுமார் 2.20 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட வோடபோன் ஐடியா நிறுவனம், 4ஜி இணைய சேவையை தொடர்ந்து தற்போது 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக, 5ஜி இணைய சேவையை சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டும் கொண்டுவரப்பட உள்ளது. தொடர்ந்து அதனை பல்வேறு நகரங்களுக்கு நீட்டிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் ஐடியா நிறுவனம் வெவ்வேறு விலைகளில், வெவ்வேறு சேவைகள் அடிப்படையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இருப்பினும், சூப்பர்ஹீரோ நன்மைகள் (VI Superhero Benefits) திட்டங்களில் மட்டுமே அதீத நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனலாம் அப்படி இருக்க வருடாந்திர ரீசார்ஜ் பிளான்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் பெரிய அளவில் நன்மைகளை வாரி வழங்கி வருகின்றன.
வோடபோன் ஐடியா: வருடாந்திர சூப்பர்ஹீரோ நன்மைகள் திட்டம்
சூப்பர்ஹீரோ நன்மைகள் திட்டம் 365 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில் தினமும் 2ஜிபி டேட்டா கொடுக்கப்படும். அந்த வகையில், தற்போது புத்தாண்டு பரிசாக அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்ஹீரோ நன்மைகள் திட்டத்தின் அடிப்படையில் மூன்று வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை வோடபோன் ஐடியா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
சூப்பர்ஹீரோ நன்மைகள் திட்டத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வாடிக்கையாளர்கள் வரம்பற்ற இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இது வருடாந்திர திட்டங்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது VI வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கும் நீட்டித்துள்ளது. அந்த வகையில், வோடபோன் ஐடியா சூப்பர்ஹீரோ நன்மைகள் திட்டத்தின் அடிப்படையில் வரும் மூன்று வருடாந்திர பிளான்களையும் இங்கு காணலாம்.
3799 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
3799 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 365 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் தினமும் 2ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். அதுபோக நள்ளிரவு முதல் அதிகாலை வரை வரம்பற்ற டேட்டா சேவையும் நீங்கள் அனுபவிக்கலாம். மேலும் Data Rollover, Delight Services போன்றவையும் இதில் கிடைக்கும். வரம்பற்ற காலிங் வசதியுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். ஒரு வருடத்திற்கான அமேசான் ப்ரைம் லைட் சந்தாவும் இத்திட்டத்தில் கிடைக்கும்.
3699 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
3699 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதிலும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வரம்பற்ற டேட்டா சேவையை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல Data Rollover, Delight Services போன்ற ஆப்பர்களும் இதில் உள்ளன. வரம்பற்ற காலிங் வசதியுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இத்திட்டத்தில் கிடைக்கும்.
3599 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
3599 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் இதில் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 365 நாள்கள் ஆகும். நள்ளிரவு முதல் அதிகாலை வரை வரம்பற்ற இணைய சேவை கிடைக்கும். மேலும் Data Rollover ஆப்பர் மட்டும். கிடைக்கும். வரம்பற்ற காலிங் வசதியுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இதில் ஓடிடி வசதி கிடையாது.
Data Rollover, Delight Services என்றால் என்ன?
தினமும் வழங்கப்படும் 2ஜிபி டேட்டாவில் வார நாள்களில் முழுவதும் உங்களிடம் பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை அப்படியே நீங்கள் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களில் பயன்படுத்திக்கொள்ளலாம், இதன் பெயரே Data Rollover. மேலும், மாதாமாதம் 2ஜி டேட்டா கூடுதலாக கிடைப்பதே Delight Services ஆகும். இவை ஒரு சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது.