இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்திய PSLV-C60 ராக்கெட் சுமந்து சென்ற POEM-4 தளத்தில் ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்ட காராமணி விதைகள் (Cowpea seeds) முளைவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நுண் புவியீர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆய்வு செய்ய, சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ஆராய்ச்சி தொகுதி (CROPS) பரிசோதனையின் ஒரு பகுதியாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மூலம் இஸ்ரோ நிறுவனம் எட்டு Cowpea விதைகளை அனுப்பியது. […]