திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கவுள்ளார். விருது பெறுவோர் அனைவருக்கும் தலா ரூ 2 லட்சம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை வழங்கப்படும்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள் விருதுகளின் பட்டியல்:
அய்யன் திருவள்ளுவர் விருது – மு.படிக்கராமு
பேரறிஞர் அண்ணா விருது – தஞ்சை கீழையூரை சேர்ந்த எல் கணேசன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொ செல்வகணபதி
மகாகவி பாரதியார் விருது – கவிஞர் கபிலன்
தமிழ்த்தென்றல் திருவிக விருது – ஜிஆர் இரவீந்திரநாத்
தந்தை பெரியார் விருது – விடுதலை ராஜேந்திரன்
அண்ணல் அம்பேத்கர் விருது – எம்.பி ரவிக்குமார்
முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விசுவநாதம் விருது – பொதியவெற்பன்
முத்தமிழறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி