நவி மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சீவுட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நவி மும்பையில் உள்ள என்ஆர்ஐ மீது போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு ஆகிப் படிவாலா என்பவரை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். கணவர், அவரது குடும்பத்தினருடன் நாங்கள் பிரிட்டனுக்கு சென்றோம். பிரிட்டனில் கணவர் வேலை செய்கிறார்.
அங்கு சென்ற பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் என்னை அதிகமாக சித்ரவதை செய்தனர். என்னுடைய நகைகள் அனைத்தையும் கணவர் பறித்துக் கொண்டு, என்னை இந்தியாவுக்கு துரத்திவிட்டார். அதன் பிறகு என்னுடன் பேசுவதை துண்டித்துக் கொண்டார். அதன்பிறகு ஒரு நாள் வீடியோ அழைப்பில் என்னை தொடர்பு கொண்ட கணவர், திடீரென வீடியோ வழியாகவே முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக கூறினார். இவ்வாறு அந்தப் பெண் கூறினார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.