Smart TV Cleaning Tips: இன்று எல்லா வீடுகளிலும் ஸ்மார்ட் டிவியை காணலாம். ஸ்மார்ட் டிவிகள் சாதாரண டிவிகளை விட மெல்லியதாக இருக்கும். ஆனால், தரத்தில் சாதாரண டிவியை விட சிறந்தது. ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வது எளிய வேலை தான். ஆனால் சரியாக செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். டிவியை சுத்தம் செய்வது தொடர்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது சேதங்களை தவிர்க்க (Tech Tips) உதவும்.
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது செய்யக் கூடாத சில தவறுகள்
இரசாயனங்கள் பயன்படுத்த வேண்டாம்
டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய எந்த இரசாயனங்களையும் பயன்படுத்த வேண்டாம்., இந்த பொருட்கள் திரையை சேதப்படுத்தும்.
கடினமான பிரெஷ்களை பயன்படுத்த வேண்டாம்
கடினமான பிரெஷ்களை பயன்படுத்தினால் திரையைக் கீறி அதன் பிரகாசத்தைக் குறைக்கும்.
சுத்தம் செய்ய தண்ணீரை தெளிக்க கூடாது
தண்ணீர் அதிகம் பயன்படுத்தினாலோ அல்லது தெளித்தாலோ திரையில் ஊடுருவி டிவியை சேதப்படுத்தும்.
கடினமான துணிகளை பயன்படுத்தக் கூடாது
டிவியை துடைக்க கடினமான துணிகளை பயன்படுத்த வேண்டாம். இவை திரையை கீறலை ஏற்படுத்தலாம்.
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
டிவியின் மின்சார இணைப்பை துண்டிக்கவும்
சுத்தம் செய்யும் முன் எப்போதும் எல்லாவற்றுக்கும் முதலில் டிவியை ஆஃப் செய்ய வேண்டும் மின் இணைப்பை துண்டிக்கவும். அதோடு அதன் பிளக்கையும் நீக்குவது பாதுகாப்பானது. இதன் மூலம் எந்த வித மின்சார ஷாக் ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம். இதனால் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் அபாயம் இல்லை.
மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தவும்
ஸ்மார்ட் டிவி திரையை உங்கள் பலத்தை பிரயோகித்து மிகவும் அழுத்தி தேய்க்க வேண்டாம். மென்மையாக சுத்தம் செய்யவும். மைக்ரோஃபைபர் துணியை லேசாக ஈரப்படுத்துவதன் மூலம் டிவி திரையை சுத்தம் செய்யலாம். அதிக தண்ணீர் பயன்படுத்த வேண்டாம்.
தூசியை அகற்ற ஏர் ப்ளோயரரைப் பயன்படுத்தவும்
டிவியின் பக்கங்களிலும் போர்ட்களிலும் தேங்கியிருக்கும் தூசியை அகற்ற ஏர் ப்ளோயரைப் பயன்படுத்தலாம்.
ஸ்கிரீன் கிளீனரை பயன்படுத்தவும்
டிவியின் திரையில் உள்ள கரைகள் அதை அகற்ற நீங்கள் சானிடைசர் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் கூட பயன்படுத்தலாம். டிவி திரையில் எந்த வகையான கடினமான இரசாயனத்தையும் பயன்படுத்த வேண்டாம். இது திரையை சேதப்படுத்தலாம்.