Tata Punch: மாருதியின் 40 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த 'Punch' – சொல்லாமல் அடித்த கில்லி

மாருதி சூஸுகியின் 40 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

2024-ல் அதிகமாக விற்பனையான கார்களில் முதலிடத்தை டாடாவின் காம்பக்ட் எஸ்யூவியான Punch பிடித்துள்ளது. மொத்தமாக 2,02,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. எப்போதும் முதலிடத்தில் இருக்கும் மாருதி சூஸுகியின் கார்கள் பின் நகர்ந்துள்ளன. Wagon R மாடல் 1,91,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

Tata Motors | டாடா மோட்டார்ஸ்

2024-ல் அதிக விற்பனையான டாப் 5 கார்களின் பட்டியலில் மூன்று கார்கள் Wagon R, Ertiga, Brezza கார்கள் மாருதி சூஸுகியின் உடையது. Hyundai Creta தவிர. பெட்ரோல், சிஎன்ஜி, EV என எரிபொருளில் வெரியேஷன் காட்டும் பஞ்ச் குறித்து அதன் முதன்மை இயக்குநர் சைலேஷ் சந்திரா, “மல்டி பவர்டிரைன் ஸ்ட்ராடிஜி தயாரிப்புகளை எங்களின் SUV போர்ட்போலியோவில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 2024-ல் CNG வளர்ச்சி 77% ஆக உயர்ந்தது, 1,20,000 யூனிட்கள் விற்பனையானது… SUV செக்மென்ட்டில் 19% உயர்ந்து 2 லட்ச யூனிட்கள் விற்பனையானது” என்று தெரிவித்துள்ளார்.

2018-ல் 52 சதவிகித மார்கெட் ஷேரைக் கொண்டிருந்த மாருதி சூஸுகியின் 2024 ஷேர் 41 சதவிகிதமளவுக்கு குறைந்துள்ளது. இந்தாண்டில் ஒட்டுமொத்தமாக 42.86 லட்சம் கார்கள் நாடு முழுவதும் விற்பனையாகியுள்ளன. அப்போர்டபிள் விலையை தாண்டி பிரிமீயம், SUV நோக்கி மக்களின் விருப்பம் நகர்வதை பார்க்க முடிகிறது.

Tata Punch

டாடா பஞ்ச்

2021-ல் அக்டோபர் மாதம் அறிமுகமான டாடா பஞ்ச், கம்பிலீட் கார் ஃபீலிங்கை ஏற்கத்தக்க விலையில் அளித்ததே இதன் வரவேற்புக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. அறிமுகமான 10 மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்ஸ் விற்பனையாகியது. மைக்ரோ SUV ப்ரோபொஷன் உடன் மைல்ட் ஆன ஆப் ரோடு ஆப்ஷன், டால் பாய் டிசைன், ஸ்பேசியஸான கேபின், பாதுகாப்பு ரேட்டிங்கில் ஃபைவ் ஸ்டார் என இந்திய பயனர்களின் செக் லிஸ்டில் டிக் வாங்கியதாலேயே பஞ்ச் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.6.20 லட்சம் எக்ஸ் ஷோ-ரூம் பிரைஸ் முதலே பஞ்ச்சின் செக்மென்ட் தொடங்குகிறது. டாப் வேரியன்ட் ரூ.10.15 லட்சம் (எக்ஸ் ஷோரூம் விலை)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.