உ.பி.யில் ஆஸி. வெஸ்டர்ன் சிட்னி பல்கலை. கிளை: மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய கல்வித் துறை அமைச்​சகம் சார்​பில், புதிய கல்விக் கொள்கை அமலானது. இதில், வெளி​நாட்டு பல்கலைக்​கழகங்​களின் கிளைகளை இந்தியா​வில் அமைக்க அனுமதி அளிக்​கப்​பட்​டது.

இதையடுத்து, குஜராத்​தின் காந்தி நகரில் முதல் வெளி​நாட்டு பல்கலைக்​கழக​மாக, ஆஸ்திரேலி​யா​வின் டீக்​கின் பல்கலைக்​கழகம் (Deakin University) சர்வதேச கிளையை தொடங்​கியது.

குஜராத்​தில் 2-வதாக ஆஸ்திரேலி​யா​வின் உல்லாங்​காங் பல்கலைக்கழக (Wollongong University) கிளை அமைக்​கப்பட்​டது. மூன்​றாவதாக ஹரியானா​வின் குரு​கிராமில் பிரிட்​டனின் சவுத்​தாம்டன் பல்கலைக்​கழகம் (University of Southampton) கிளை அமைக்​கிறது. இந்நிலை​யில், ஆஸ்திரேலி​யா​வின் வெஸ்​டர்ன் சிட்னி பல்கலைக்​கழகம் (டபுள்​யுஎஸ்​யு), இந்தியா​வில் தனது முதல் கிளையை அமைக்க உள்ளது. இது, உ.பி.​யின் கிரேட்டர் நொய்​டா​வில் அமைகிறது. இதற்​காக, அந்தப் பல்கலைக்​கழகத்​துடன் மாநில அரசு புரிந்​துணர்வு ஒப்பந்தம் செய்​துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே இங்கு மாணவர் சேர்க்கை தொடங்​கு​கிறது.

பாஜக முதல்​வராக ஆதித்​யநாத் பதவி​யேற்றது முதல், உ.பி.​யில் பல வளர்ச்​சித் திட்​டங்கள் செயல்​படுத்​தப்​படு​கின்றன. குறிப்பாக நொய்​டா​வில் முதல் வெளி​நாட்டு பல்கலைக்​கழகக் கிளை​யும் அமைகிறது. முதல் கட்டமாக வர்த்​தகக் கட்டிடத்​தில் தொடங்​கப்​படும் வெஸ்​டர்ன் சிட்னி பல்கலை. கிளை, பின்னர் கிரேட்டர் நொய்​டா​வில் 7 ஏக்கரில் பிரம்​மாண்​டமாக அமைக்​கப்பட உள்ளது. இதற்கான புரிந்​துணர்வு ஒப்பந்​தத்​தில் டபுள்​யுஎஸ்​யு​வின் துணை வேந்தர் பேராசிரியர் திபோரோ ஸ்வீனி உ.பி.​யின் தலைமைச் செயலர் மனோஜ் குமார் ஆகியோர் கையெழுத்​திட்​டனர்.

இதுகுறித்து உ.பி. தலைமை செயலர் மனோஜ் குமார் கூறும்​போது, “நாட்​டில் உ.பி. அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. நொய்டா உட்பட உ.பி.​யின் மேற்​குப் பகுதி வேளாண்மை மற்றும் ஜிடிபி​யில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது. கிரேட்டர் நொய்​டா​வின் ஜேவரில் அமையும் சர்வதேச விமான நிலை​யத்​தால் உ.பி.க்கு வெளி​நாடு​களின் நேரடி தொடர்​பும் கிடைக்​கிறது. இதில் ஒன்று​தான் டபுள்​யுஎஸ்​யு​வின் முதல் இந்தியக் கிளை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.