காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் 184 பேர் பலி

காசா,

இஸ்ரேல் – காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு நிலவி வந்தது. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.இந்த போரில் இதுவரை சுமார் 45 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி காசா மீது கடந்த 3 நாட்களில் 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியது. இதில் 184 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் பணய கைதியாக உள்ள இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய லிரி அல்பாக் (வயது 19) என்ற இளம்பெண் பேசும் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் சமீபத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் தன்னை மீட்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே பணய கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரேலிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.