‘அமரன்’ பட ஹிட்டிற்கு பிறகுச் சிவகார்த்திகேயன், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவிருக்கிறது. இதற்கிடையில் சின்ன ஓய்வுக் கிடைத்துள்ளதால் முருகனின் அறுபடை வீட்டிற்கும் ஆன்மீகப் பயணம் செல்லவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இன்று (ஜனவரி 6) திருச்செந்தூர் முருகன் கோவிலிருந்து ஆரம்பித்து திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி என அடுத்தடுத்துச் செல்லவிருக்கிறார்.
அவ்வகையில், இன்று திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்யனும்ங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை. இன்னைக்குத் திருச்செந்தூர்ல ஆரம்பிச்சு தரிசனம் பண்ணினேன்.
இனி அடுத்தடுத்த படை வீடுகளுக்குச் செல்லணும். இது கடந்த மாதமே திட்டமிட்டிருந்தேன். ஆனால், பெஞ்சல் புயல் வந்ததால் தள்ளிப்போனது. ‘அமரன்’ வெற்றி, நன்றிகள், இன்னும் பல வேண்டுதல்கள் என இந்த ஆன்மீகப் பயணம் இருக்கும்” என்றார்.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கக்கூடாது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கணும். நம்ம எல்லாரும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும். அவர்களுக்குத் தைரியம் கொடுக்க வேண்டும். இனி இது மாதிரியான கொடுமைகள் நடக்கக் கூடாது. சாமி கிட்டையும் இதையே வேண்டுதலாக வைக்கிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.
விகடன் ஆடியோ புத்தகம்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…