கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாடு சட்டசபையில் ‘ஆளுநர் உரை’ என்றாலே சர்ச்சையாகத் தான் உள்ளது.
2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என் ரவி. அப்போதிருந்து இன்று வரையான ஆளுநர் உரை வரலாற்றை சற்று பார்ப்போம்…
2022-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட முழு ஆளுநர் உரையையும் எந்த மாறுதலும் இல்லாமல், எந்த கருத்து வேறுபாடு காட்டாமல் முழுவதுமாக படித்தார். இது மட்டும் தான், அவர் கருத்து வேறுபாடில்லாமல் படித்த முதலும், கடைசியுமான உரை.
2023-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு கொடுத்திருந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு கொடுத்த உரை தான் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததையடுத்து ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.
2024-ம் ஆண்டு, சட்டசபை தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது… தேசிய கீதம் பாடப்படுவது இல்லை என்று உரையை வாசிக்காமேலேயே ஆர்.என்.ரவி வெளியேறினார். அவர் வெளியேறியப் பிறகு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
2025-ம் ஆண்டு, அதாவது இன்றும், சட்டசபை தொடக்கத்திலேயே, கடந்த ஆண்டு கூறிய அதே காரணத்தை தேசிய கீதம் பாடவில்லை என்று வெளியேறியிருக்கிறார்.