சென்னை ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, […]