ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் காங்கிரஸ், பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்​.ரவி செயல்​படு​வதாக தமிழக காங்​கிரஸ் கட்சி தலைவர் செல்வப்​பெருந்தை குற்​றம்சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்பாக சட்டப்​பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்​. ரவி, தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக இருக்​கிறார். தமிழகத்​துக்கு எதிரான நிலையை எடுக்​கிறார். இது கூட்​டாட்சி தத்து​வத்​துக்​கும், ஜனநாயகத்​துக்​கும் எதிரானது.

பல்கலைக்கழகங்​களில் துணை வேந்​தர்கள் இல்லாதது தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்​கின்றன. எதற்கு துணை வேந்​தர்களை நியமிக்க ஆளுநர் மறுக்​கிறார்.இவ்வாறு அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் தமிழக மக்களுக்கு எதிராகவே இருக்​கிறது. ஆளுநர் ஆர்.என்​.ரவிக்கு எதிர்ப்பு தெரி​வித்து தமிழக ​காங்​கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்திருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறினார்​.

ஜி.கே.மணி கருத்து: சட்டப்​பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறிய​தாவது: சென்னை அண்ணா பல்கலைக்​கழகத்​தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க​வில்லை. அதை கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாக போராடு​வதற்கும் அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. பேசுவதற்​கும் வாய்ப்பு அளிக்க​வில்லை, போராடு​வதற்​கும் அனுமதி இல்லை. இப்படி அனுமதி மறுக்​கப்​பட்டு போராடிய​வர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து மண்டபத்​தில் பிடித்து வைக்​கின்ற கொடிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதையொட்டி பாமக வெளிநடப்பு செய்திருக்​கிறது.

அரசியல் கட்சியாக இருந்​தா​லும் சரி எந்த அமைப்பாக இருந்​தா​லும் சரி ஜனநாயகத்​தில் போராடு​வதற்கு உரிமை இருக்​கிறது. அதற்கு அனுமதி வழங்க வேண்​டும் என்று பொது​வுடமைக் கட்சிகள் கூட அதை சொல்​கின்​றனர். திமுக கூட்டணி கட்சி​யில் இருக்க கூடிய​வர்களேஇதை சொல்​வது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக கட்சிகளை​யும், அமைப்பு​களை​யும் மதித்து ​போராடு​வதற்கு அனு​மதி வழங்​கப்பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறினார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.